♥பெத்தமனசு....
♥பிறக்கப்போகும் உங்கள் குழந்தையின் எதிர்கால மனநிலை... தாய் கர்ப்பமாக இருக்கும் காலகட்ட மனநிலையே என்பதை மறவாதீர்கள்... எனவே அவள் தாய்மை அடைந்தது முதல் பிரசவம் ஆகும் வரை அவளையும் குழந்தைபோல் பார்த்திடுங்கள்.
♥நன்றாக பார்ப்பதென்பது சிலபேரைப்பொறுத்தவரை
பழங்கள் பால் என வேண்டிய சத்தான எல்லா உணவுகளையும் வேண்டி தருவது...
வேலை எதுவும் செய்யவிடாமல் வேலைக்காரியை வைப்பது... என நினைக்கிறார்கள்..
♥ஆனால் இவை எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை... கர்ப்பகாலத்தில் ஒரு பெண் எதிர்பார்ப்பது அமைதியான அழகான ஆரோக்கியமான ஒரு காலகட்டத்தை மட்டுமே...
♥ஐரோப்பிய நாடுகளில் மனைவி கர்ப்பமானதும் கணவன் மார் விடுமுறை போட்டுவிட்டு மனைவிகூடவே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
♥நல்ல உணவுகளை வாங்கி வீடடில் வாங்கி வைத்து விட்டு அந்தநேரம் நீங்கள் வெளியே இருந்தால். உங்கள் மனைவியால் அதை மகிழ்ச்சியாக சாப்பிட முடியுமா என யோசியுங்கள்.
♥கர்ப்பகாலத்தில் ஒரு தாயின் மனதில் பதியும் விடயங்கள் . ஓடும் எண்ணங்கள்.. தொடர்ச்சியாக பார்ப்பது கேட்பது போன்றவை தான் பிறக்கும் குழந்தையின் மனதில் பதிந்திருக்கும் என்பதை மறவாதீர்கள்.
♥எனவே கர்ப்பகால மனைவியை நோக்கி ஒரு கடுமையான வார்த்தைகளை கூட வீசாதீர்கள்...
"ஏதோ நீ மட்டும் தான் குழந்தை பெத்துக்கிறமாதிரி அலட்டிக்கிராய்"
போன்ற வார்த்தைகள் அவளை கடுமையாக பாதிக்கும்.
♥இதை விட சில பெண்களே கர்ப்பிணிகளை வசைபாடுவதும் உண்டு... " நான் பெத்துக்காத பிள்ளையா" நாங்க எல்லாம் இப்படியா முனகிட்டிருந்தம்" என்ற வார்த்தைகள் எவ்வளவு பாதிக்கும் என யாரும் உணருவதில்லை.
♥எந்தக்கர்ப்பிணியும் கர்ப்பகாலத்தில் பெரிய பெரிய ஆசைகளை வைத்திருப்பதில்லை... சாதாரண ஆசைகளை மட்டுமே மனதில் வைத்திருப்பர்...
♥என் கணவன் என்கூட அதிகமா நேரம் செலவிடனும் என முதன்மையாக எதிர்பார்ப்பாள்.
இதை பல பெண்கள் பெறுவதில்லை... ஏன் குழந்தை பிறந்ததை கூட ரெலிபோண் மூலம் அறியும் ஆண்கள்தான பலர் இருக்கிறார்கள்.
♥உங்கள் மனைவியுடன் அன்பாக பேசுங்கள்
அவளை பூங்கா ஆலயம் கடற்கரை என செலவே இல்லாத இடங்களுக்கு அடிக்கடி கூட்டிப்போய் ஆற அமர உட்கார்ந்து பேசுங்கள்....
♥எப்போதும் நல்ல வார்த்தைகள் மற்றும் நகைச்சுவையாக பேசுங்கள்...
♥இதமான இசை மற்றும் ஆக்க பூர்வமான ஆடியோ வீடியோக்களை பாருங்கள்...
♥மனைவியை தாராளமாக வீட்டில் வேலை செய்யவிடுங்கள் அது அவளின் சுகப்பிரசவத்திற்கு உதவியாக இருக்கும்.. நீங்களும் கூடவே மனைவியின் வேலையில் பங்கெடுங்கள்.
♥இந்த நேரத்தில் மாமியார் மருமகள் பிரச்சனையில் இருந்து உங்கள் மனைவியை கொஞ்சம் பாதுகாத்து வரவேண்டியதும் கணவராகிய உங்கள் கடமையே.
♥பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானம் செய்தது கணவராகிய உங்கள் விந்துதான் என்பதை மறவாதீர்கள்....
♥எனவே பெண்குழந்தை பிறந்தால் உங்கள் மனைவியை உடனேயே வசை பாடும் முன் நினையுங்கள் இது என் பெண்குழந்தை நான் தான் உருவாக்கினேன் என....
♥ஆண்களை கடைசிவரை தாயாய் மனைவியாய் மகளாய் பேத்தியாய் காப்பாற்றுவது பெண்கள் தான் என்பதை மறவாதீர்கள்...
♥பெறுபவள் மனசு சுத்தமாக இருந்தால் தான் பிறக்கும் பிள்ளை மனசும் சுத்தமாக இருக்கும்.
0 Comments
Thank you