♥எத்தனை விதமாக தான் ஏமாற்றுவரோ!
♥சமீபத்தில், என் தோழியை பார்க்க போன போது, இயல்புக்கு மாறாக சோர்வாக இருந்தாள். 'ஏன்...' என்று கேட்டேன்.
♥'போன வாரம் நானும், என் கணவரும் துக்கத்துக்கு சென்று, காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு நேரம், நான்கு வழி சாலை ஓரத்தில், மூன்று பேர், கையை நீட்டி, காரை நிறுத்தச் சொல்லி வேண்டினர். அதில், இரண்டு பேர் ஆண்கள் மற்றும் ஒரு நிறைமாத கர்ப்பிணி தோற்றத்தில், இளம் பெண் நின்றிருந்தார்.
♥'பரிதாபப்பட்டு காரில் ஏற சொன்னோம். 'அடுத்த ஊரில் இறக்கி விட்டால் போதும்...' என, சொல்லியபடி அமர்ந்தனர்.
♥சற்று நேரத்தில், வந்தவர்களில் ஒருவன், கர்ணகொடூர குரலில், 'மரியாதையா நகைகளை கொடுங்க, இல்லே...' என, மிரட்டியபடி, என் கழுத்திலும், கணவர் கழுத்திலும் துணியை சுற்றி நெருக்கினார்.
♥'நிலைமையை புரிந்து, போட்டிருந்த செயினை கழற்றிக் கொடுத்ததும், காரை நிறுத்தச் சொல்லி மாயமாய் மறைந்தனர்.
♥நல்லவேளை, துக்க வீட்டுக்கு சென்றதால், மெல்லிய செயின் ஒன்று மட்டுமே போட்டிருந்தேன்...' என, நடந்த கதையை சொல்லி முடித்தாள்.
'போனது போகட்டும் விடு. இதுவே, ஒரு திருமணத்திற்கு செல்லும்போது நடந்திருந்தால், உன் நகைகள் அத்தனையும் பறிபோய் இருக்குமே...
♥எப்படியோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு...'ன்னு, ஆறுதல் கூறினேன்.
♥இனி, நிஜமாகவே, யாராவது உதவி கேட்டால் கூட, செய்ய தயங்குவோம்.
ஏமாற்றுவதற்கு எத்தனை விதமாக நடிக்கின்றனர்.
0 Comments
Thank you