HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கல்லூரிப் படிப்பை முடித்த மகன்

கல்லூரிப் படிப்பை முடித்த மகன் 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள கம்ப்யூட்டர் படிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் பெற்றோர்களிடம் கேட்டான். அவர்களும் மிக மிக கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டி அவனை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.

முதலில் ஆர்வமாக வகுப்புக்குச் சென்ற மகன், திடீரென்று சோர்வானான். வீட்டில் அனைவரிடமும் எரிந்து விழுந்தான். கம்யூட்டர் பாடங்களை வீட்டில் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. வீட்டுப் பாடம் செய்யாமல் தவிர்த்தான். வகுப்புகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் தவித்துப் போனார்கள்.

அப்பா ஒருநாள், ‘‘ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாய்?’’ என்று மகனை அடிக்கப் போய்விட்டார். அம்மா குறுக்கே விழுந்து தடுக்க, அப்பா என்ன செய்வதென்று தெரியாமல் தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். 40 ஆயிரம் ரூபாய் என்பது அவருக்கு மிகப்பெரிய காசாக இருந்தது.

அம்மா பொறுமையாக கணவரை சமாதானப்படுத்தினார். மகன் கம்யூட்டர் வகுப்பை புறக்கணித்த நாளில், பயிற்சி நிலையத்துக்குச் சென்று அங்குள்ள பயிற்சியாளர்களிடம் மகனைப் பற்றி விசாரித்தார். இன்னொரு நாள் மகன் வகுப்பில் இருக்கும்போது, அவனுக்குத் தெரியாமல் பின்னால் நின்று ஐந்து நிமிடங்கள் கவனித்தார். மகனின் பிரச்னையை அம்மா புரிந்து கொண்டார்.

மறுநாள் மகனோடு ஒரு திருமண விழாவுக்குச் சென்றார். இனிப்பு, வடை, பாயசம், பொரியல், அவியல், பச்சடி, ஐஸ்க்ரீம் என சிறப்பான விருந்து பரிமாறினார்கள். பெரிய இலைகளை விரித்திருந்த பந்தியில் அம்மாவும் மகனும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று அம்மா விருந்து நடக்கும் இடத்தை இப்படியும் அப்படியுமாய் பார்த்தார். பின் சோர்வடைவதாய் காட்டிக் கொண்டார். ‘‘எனக்கு பசிக்கல’’ என்று சொல்லி எழுந்து வந்து விட்டார். மகனுக்கோ ஒரே குழப்பம், அவனும் வேக வேகமாக சாப்பிட்டு மண்டபத்துக்குள் வந்தால் அங்கே அம்மா தனியே ஒரு சேரில் அமர்ந்திருந்தார்.

‘‘என்னம்மா ஆச்சு? ஏன் சாப்பிடாம வந்துட்டீங்க?’’

‘‘மனசு சரியில்லப்பா!’’

‘‘என்னாச்சுன்னு சொல்லிருங்கம்மா ப்ளீஸ்!’’

‘‘நான் சாப்பிடவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள சிலர் சாம்பார் முடிச்சிட்டு காரக்குழம்புக்கு போறாங்க. சிலர் ரசம் ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சிலர் அப்பளம், பழம் பாயசம் போட்டு ஒண்ணா சாப்பிட்டு விருந்தையே முடிச்சிட்டாங்க!’’

‘‘அதனால என்னம்மா?’’

‘‘அதனால என்னவா? அவங்க என்ன முந்திட்டு சாப்பிடும்போது எனக்கு மனசு கஷ்டமா இருக்காதா? அதனாலதான் சாப்பிடல!’’

‘‘அம்மா! காமெடி பண்ணாதீங்க. உங்க குறிக்கோள் உங்களுக்கு இலையில் போட்டிருக்கிற விருந்தை ஒழுங்கா சாப்பிடுறதுதான. ஏன் மத்தவங்க சாப்பிடறதோட உங்களை ஒப்பிட்டு சாப்பிடாம வந்துட்டீங்க? இப்ப யாருக்கு நஷ்டம். உங்களுக்குத்தானே?’’

அம்மா மகனைக் கூர்ந்து ஒரு நிமிடம் பார்த்தார்.

‘‘ஒரு நூறு ரூபாய் சாப்பாடு வீணா போறதுக்கே நீ இவ்ளோ கவலைப்படுறியே? ஆனா நீ உன் கல்லூரி நண்பர்கள் கம்ப்யூட்டர் வகுப்புல உன்னை விட நல்லா படிக்கிறதப் பார்த்து, உன்ன அவங்களோட வீணா ஒப்பிட்டு, உங்கப்பா கஷ்டப்பட்டு கொடுத்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வீணடிக்கிறியே... அதைப் பற்றி என்னைக்காவது யோசிக்கறியா?’’ என்றார்.

மகன் திகைத்தான். பிறகு வருத்தத்துடன் தலைகுனிந்தான்.

அம்மா அவன் முகத்தை உயர்த்திப் பிடித்தார். ‘‘உனக்கு ஒரு பாடத்திட்டம் இருக்கு. அதைப் படிச்சி முடிக்கிறது மட்டும்தான் உன் லட்சியமா இருக்கணும். பக்கத்துல இருக்கிற உன் நண்பர்கள் ஒருவேளை வேகமா படிக்கலாம். உன்னைவிட நல்லா கூட படிக்கலாம்.

ஆனா அவங்களோடு நீ உன்னை ஒப்பிட்டு எப்பவும் குழம்பக்கூடாது. உனக்கான நேரத்தை எடுத்துக்கோ. மெதுவா படி, புரிஞ்சிக்கிட்டு படி. உன்னோட குறிக்கோள் உன் இலையில போட்டிருக்கிற கல்வி சாப்பாடை சாப்பிடுறது மட்டும்தான். அடுத்தவங்க வேகமா சாப்பிடறதைப் பார்த்து சாப்பிடாம எந்திரிக்கிறது இல்லை!’’

‘‘புரியுதும்மா! இனிமே யார் கூடவும் என்னை ஒப்பிடாம, என் அறிவை வளர்த்துக்கிறதுக்கு மட்டும் படிக்கிறேன்’’ என்றான் மகன்.

‘‘கல்வியில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் அப்படித்தான். உன் வாழ்க்கையை நீ வாழு. அடுத்தவங்களோட ஒப்பிட்டு சோர்ந்து போயிடாதே! சரி, நான் வர்றேன்...’’

‘‘எங்கம்மா போறீங்க?’’

‘‘ம்ம்ம்... உனக்கு பாடம் கத்துக் குடுக்குறேன்னு நல்ல சாப்பாட்டை சாப்பிடாம வந்துட்டேன். இன்னொரு முறை போய் சாப்பிட்டுட்டு வர்றேன்’’ என்று பந்தியை நோக்கிப் போனார் அம்மா.

மகனுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

Post a Comment

0 Comments