HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மாதவிலக்கு என்றால் என்ன?

♥#மாதவிலக்கு என்றால் என்ன? எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்? சுகாதாரமாக இருப்பது எவ்வாறு? போன்ற பொதுவான சந்தேகங்களுக்கு விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

♥மாதவிலக்கு, பெண்களின் உடலில் மாதாமாதம் நடைபெறும் ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். பன்னிரண்டு வயது முதல் பருவமடைந்த எல்லாப் பெண்களுக்கும் 49 வயது வரை நிகழக்கூடிய ஒன்று. முதலில் ஒரு பெண்ணின் உடலில் மாதவிலக்கு மற்றும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புகள் எங்கு அமைந்திருக்கின்றன என அறிவோம். 

♥கருப்பையானது பெண்ணின் அடிவயிற்றில் தொப்புளுக்கு சற்று கீழே பேரிக்காய் வடிவில் தசைகளால் ஆன ஒரு அமைப்பு.  இரு இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள தசை நார்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் இரு சினைக்குழாய்கள் மற்றும் சினைப்பைகள் இருக்கும். கருப்பையின் அடிப் பாகமான கருப்பைக் குழாய் ஆனது யோனியுடன் இனைக்கப்பட்டு மாதவிலக்கு மற்றும் கருத்தரிப்பிற்கு ஒரு பாதையாக அமைந்திருக்கிறது.

#மாதவிலக்கு_என்பது_என்ன? 
♥பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 

♥கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.

♥ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. 

#மாதவிலக்கிற்கும் #ஹார்மோன்களுக்கும்_என்ன_தொடர்பு♥ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. 

♥ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பையினுள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன. 45 அல்லது 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாக குறைகிறது. இதனால் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது, இதையே  ‘மெனோபாஸ்’ (Menopause) என்கிறோம்.

♥மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய #தற்சுகாதார #வழிமுறைகள்:

மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல.
அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.

♥மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு  முறையாவது பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. 

♥சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். 
மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை எடுத்துச்செல்வது அவசியம்.

♥இளம் பெண்களுக்கு மாதவிலக்கு குறித்து எழும் #பொதுவான #சந்தேகங்கள்:

♥அதிக வலி ஏற்படக் காரணம் என்ன?
மாதவிலக்கின் போது கருப்பையின் வெளிப்புறத்திலுள்ள தசைநார்கள் கருப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளேயுள்ள ரத்த நாளங்களான திசுக்களை கருப்பையின் வாய்ப்பகுதி வழியே வெளியேற்றுவதால் கருப்பையை தாங்கிப் பிடித்திருக்கும் இடுப்பு எலும்புகளில் வலி ஏற்படுகிறது. குழந்தை பெறாத இளம் பெண்களுக்கு  கருப்பையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதால் தசை நார்கள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த நேரிடுகிறது, அதன் விளைவாக இளம் பெண்களுக்கு அடிவயிற்றில் கூடுதல் வலி ஏற்படுகிறது. 

♥வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளலாமா?

பொதுவாகவே வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அதிக வீரியம் கொண்ட ஒரு சில வலி நிவாரண மாத்திரைகளினால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வலியுடன் கூடிய மாதவிலக்கில் இருந்து விடுப்பெற சில எளிய உடற்பயிற்சிகள் மற்றும் வீட்டு வைத்தியங்களே போதுமானது, தேவையில்லாமல் மாத்திரைகளை எடுப்பது கருப்பையில் நீர்க்கட்டிகளை உருவாக்க நேரிடும். 

♥ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்து ஒரு டம்ளர் மோரில் மோரில் கலந்து குடித்தால் வலி குறையும்.

♥மாதவிலக்கின் போது வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா?

♥பொதுவாக நமது கை, கால்களில் அடிபட்டு ரத்தம் வந்தால் அதில் காற்று படும்போது ஒருவிதமான வாடை வீசுவது இயல்பு, அதே போன்று மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தில் இருந்து வாடை வருவதும் இயல்பு. வாடை வருவதால் பலர் இதைக் கெட்ட ரத்தம் என்கிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது உடலில் எந்தப் பகுதியிலும் கெட்ட ரத்தம் என்று ஒன்று இல்லை என்பதே உண்மை.

♥மாதவிலக்கு நாட்களில் சுபகாரியங்கள் மற்றும் கோயில்களுக்கு செல்லக்கூடாது என்பது சரியா?

♥கண்மூடித்தனமான எந்த ஒரு சடங்கும் தவறானதே. பெண்மையின் ஒரு அடையாளமே மாதவிலக்கு, எனவே அதை எண்ணி வெட்கப்படவோ அல்லது அதை இழிவாகக் கருதுவதோ மூடத்தனம் ஆகும். அறிவியல் உண்மைகளை மறந்துவிட்டு பெண்கள் மீது கட்டுப்பாடுகளை திணிப்பதும் அவர்களைத் தனிமைப்படுத்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும், தேவைகளையும் பறிப்பதும் எந்த வகையிலும் நியாயம் இல்லை. 

♥மாதவிலக்கின்போது அசைவம் சாப்பிட்டால் உதிரப்போக்கில் வாடை வீசுமா?

♥நாம் உண்ணும் உணவு தொண்டை வழியே நுழைந்து உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைந்து செரிமானம் அடைந்து விடுகிறது, அதிலிருக்கும் சத்துக்கள் மட்டுமே நமது ரத்தத்தில் கலக்கின்றன. இரப்பைக்கும், கருப்பைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதே அறிவியல் பூர்வமான உண்மை. 

♥ரத்தசோகைக்கும் மாதவிலக்கிற்கும் தொடர்பு உண்டா?

♥மாதவிலக்குப் பிரச்னை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். உதிரப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது. எனவே ரத்த சோகையை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நமது உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதாவது முருங்கைக்கீரை, அறைக்கீரை, பேரிசை பழம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மாதுளை பழம், கர்ப்பப்பை வலுப்பெற அத்திப் பழம் போன்றவற்றைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்காமல் உண்ண வேண்டும்

Post a Comment

0 Comments