💘❤
*அன்பு உலகை ஆளும்*
🥰😍
கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே
ஓர் எறும்பு 🐜 கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். காபியை வீசினான்... விளைவு?
சண்டை ...
சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.
*༺🌷༻*
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை 🐜 எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான் 🐜.
உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல்
ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."
மனைவி சிரித்தாள். தன்
தவறை உணர்ந்தாள்.
அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப்
பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பு 🐜 சாகவில்லை. அவர்கள்
வீட்டின் மகிழ்ச்சியும் 😀 சாகவில்லை .....
*༺🌷༻*
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும்
சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு
கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.
*༺🌷༻*
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்... நாம் தவறே
செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...
தவறுகளை நகைச்சுவையாகவோ அன்பாகவோ
சொல்லிப்பாருங்கள்.. அந்தத் தவறு மறுபடி நடக்காது...
*༺🌷༻*
ஆனால் காட்டுக் கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக்
காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும்
என்பதை மறவாதீர்கள்!!
*༺🌷༻*
சாவியைப்பார்த்துசுத்தியல் கேட்டது.
"உன்னைவிட நான்
வலிமையானவனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான்
மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால்
நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே
- அதெப்படி?"
அதற்கு சாவி, "நீ என்னை
விட பலசாலிதான். அதை நானும்
ஒப்புக் கொள்கிறேன். *பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*
ஆனால் *நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்"* என்றதாம்.
*அன்பு🌹உலகை🌹ஆளும்*
💘❤
0 Comments
Thank you