விடுத்தலும் விடுபடுதலும்
வீரியம் எனக்கொள்ள பெண்ணே....!!
அரியணை துறந்து
அரண்மனை நீங்கி
புலன் அடக்கி
இச்சை களைந்து
துறவு பூண்ட சித்தார்த்தன்
புத்தன் ஆகும் முன்னமே..
யசோதரா இச்சை துறந்து
மாளிகையிலேயே
ஞானம் ஈட்டியவள்..
இல்லாளை இல்லாமல்
ஆகிவிட்டு
தியானம் வழி ஞானம் தேட
போதிமரம் நாடினான்
சித்தார்த்தன்...
அன்பு வழி
ராகுலனுக்கு அர்த்தநாரியாக...
தாய் பாதி தந்தை மீதியாய்
பெரும் சக்கியுமானாள் யசோதரா..
யசோதரா எப்படி தேடியும்
கிடைக்காத சித்தா்த்தனை
தேடலுக்குள் அடக்கியது
போதி மரக்கிளைகள்....
எதையும் தேடாத
இல்லத்துறவியிடம்
நாடி வந்து குடியேறிய
ஞானம் கண்டு
பட படத்தன போதிமரக்கிளைகள்...
விடுத்தலும் விடுபடுதலும்
வெறுமை அல்ல,
வீரியம் என்று கொள்க
பெண்களே....!!
0 Comments
Thank you