HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை

♥நம் முன்னோர்கள் வாழ்ந்த முறை ...

♥1.கழிவறையும்,குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் சற்று தள்ளி கொல்லைபுறத்தில் வைத்தார்கள்.
♦ஏன் - ?
பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நம்மை தாக்க கூடாது என்று.

♥2. சலூனுக்கும்,சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள்.
♦ஏன்? 
- கிருமிகள் எம்முடன் வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என.

♥3. செருப்பை வீட்டின் வெளியே வாசலோடு விட்டார்கள்.
♦ஏன்? 
- கிருமிகள் செருப்போடு உள்ளே வந்துவிடும் என்பதால்..

♥4. பள்ளிக்கும்,ஆபீஸுக்கும், வெளியேயும் சென்று வந்தால் 
கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள்.
♦ஏன்? 
- கிருமிகள் எம்முடன் வந்துவிடும் என்பதால்...

♥5. பிறந்தாலோ,இறந்தாலோ 
தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர்.
♦ஏன்? 
- கிருமிகள் பரவாமலும் தொற்றாமலும் இருக்க

♥6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள்.
♦ஏன்? 
- கிருமிகள் உணவோடு பரவிவிடும் என்று...

♥7. வாசல் பெருக்கி சாணம்,
மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள்.
♦ஏன்? -
 கிருமிகள் இறப்பதற்கும் பரவாமலிருக்கவும்...

♥8.மண்,செம்பு,வெண்கலப் பாத்திரங்களை உபயோகித்தார்கள்.
♦ஏன்? - 
கிருமிகள் அதில் உயிர்வாழவோ தங்கவோ முடியாது என்பதால்

♥9. வீட்டில் நன்றாக சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள்.
♦ஏன்? -
 கிருமிகள் உணவோடு எம்முடலுக்குள் செல்லாமல் இருக்க

♥தனிமனித ஆரோக்கியம்,சமூகத்தில் சுத்தம்,அண்டை அயலாரோடு 
அகலாது அணுகாது 
உறவாடுதல் போன்ற 
நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து,திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது.

♥“மூத்தோர் சொல்லும்,
முழு நெல்லிக்கனியும் 
முதலில் கசக்கும் 
பின்பு இனிக்கும்”

♥கை கொடுக்காமல் கும்பிட்டவர்களை பட்டிக்காடு என கேவலமாக பார்த்தவர்கள் இன்று கையெடுத்து கும்பிடுகிறார்கள்...

Post a Comment

0 Comments