♥மணப்பெண்ணின் தைரியம்!
♥என் உறவினர் ஒருவர், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அவர் மகனுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார். சமீபத்தில், ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வந்த நிலையில் பெண்ணை நிச்சயம் செய்ய தயங்கவே, பெண்ணின் தந்தை, 'நீங்க எதிர்பார்த்தபடியே என் பெண் இருக்கிறாள்; நீங்க கேட்ட சீர்வரிசையையும் செய்ய சம்மதிச்சுட்டோம்; அப்புறம் என்ன தயக்கம்...' என்று கேட்டார்.
♥ அதற்கு உறவினர், 'பெண்ணோட அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா சொன்னீங்களே... இது, கொஞ்ச காலம் கழிச்சு பெண்ணுக்கும் வர வாய்ப்பிருக்கு; அதான் யோசிக்கிறேன்...' என்று சொல்ல,
♥உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.
♥இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!
0 Comments
Thank you