#முகநூல்_காதல்... ♥♥♥
மணமகனை பார்த்து அதிர்ந்த
மணமகள் குடும்பத்தார்...
இதுதாண்டா காதல்ன்னு நிரூபித்த மணப்பெண்..!
காதல் மிகவும் புனிதமானது.இன்றைய காலத்தில் சில காதலர்கள் தான் தவறாக இருக்கிறார்களே தவிர காதல் எப்போதுமே புனிதமான விசயம் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் சிவகங்கையில் நடந்திருக்கிறது..
சிவகங்கையை பூர்வீகமாகக் கொண்ட பவித்ராவுக்கு இப்போது 23 வயது. இவர் பிபார்ம் படித்துக்கொண்டு இருந்த போது, விக்னேஷ்வரன் என்ற வாலிபரோடு பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் காதலாக மாறியது. கம்யூட்டர் அப்ளேசன்ஸில் டிகிரி கோர்ஸ் முடித்துவிட்டு வீட்டில் இருந்தே ஆன்லைனில் பொருள்கள் விற்கும் விக்னேஸ்வரன் அதற்காகவே பேஸ்புக் கணக்கைத் தொடங்கி காதலில் விழுந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொண்டு காதலிக்கத் துவங்கியதும், விக்னேஸ்வரன் தான் நான்கு அடி மட்டுமே உயரம் உடையவர் எனச் சொல்லியிருக்கிறார். உடனே பவித்ராவும் மனம் ஒத்துபோய்விட்டால் உயரம் ஒரு விசயமா? இது நம் காதலை விட எது உயர்ந்துவிட முடியும்? என அதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டார். ஆனால் பவித்ராவின் வீட்டுக்கு இந்த காதல் விவகாரம் தெரியவர, உயரத்தை மையமாக வைத்து பொருத்தமற்ற வரன் என காதலை நிராகரித்தனர்.
கடைசியில் வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், மாப்பிள்ளை விக்னேஸ்வரனின் உறவுகள்சூழ திருமணம் செய்தார். தொடர்ந்து பவித்ராவின் குடும்பத்தினரின் எதிர்ப்பால் கரூர் போலீஸ் ஸ்டேசனிலும் திருமணம் முடிந்த கையோடு தஞ்சம் புகுந்தது இந்த காதல் ஜோடி. அங்கு வந்த பவித்ராவின் குடும்பத்தினர் இவர் தன் மகளே இல்லை என கூறிவிட்டு போய்விட்டனர்.
உருவ வளர்ச்சியை விட மனவளர்ச்சியும், பரந்த சிந்தனையும் அவசியம் என்பதையும் இந்த காதல் ஜோடி உணர்த்தி இருக்கிறார்கள்...
0 Comments
Thank you