HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சாதித்த சங்கரப்பா

♥சாதித்த சங்கரப்பா

♥கூலி தொழிலாளியான சங்கரப்பா தனக்கு கிடைக்க வேண்டிய கூலிக்காக கடந்த இரண்டு வருடமாக அதிகாரிகளுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் சங்கரகோட்டை வடக்கு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரப்பா இவருக்கு வயது 77.

♥இவரை பார்த்துக் கொள்பவர்கள் பராமரிப்பவர்கள் என்று யாரும் கிடையாது ,தன்னையும் தன்னை நம்பி வந்த மனைவியையும் காப்பாற்ற இந்த வயதிலும் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மகாத்மாகாந்தி ஊரக நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்றார்,வேலையின் முடிவில் இவருக்கு வரவேண்டிய 35 நாள் சம்பளம் வரவில்லை ஏதோ காரணம் சொல்லி அவரை அனுப்பிவிட்டனர்.

♥தன்னை ஏமாற்றுகின்றனர் என்பது ஏழைத் தொழிலாளியான சங்கரப்பாவிற்கு புரிந்து போயிற்று.உழைத்த வேர்வையின் பலனை இன்னோருவர் சுரண்டுவதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை போராடுவது என்று முடிவு செய்தார்.
விடாமல் அலுவலகத்திற்கு ஏறி இறங்கினார் பலன் இல்லை வயதானவர் படிக்காதவர் ஏழைத்தொழிலாளி இவரால் என்ன செய்யமுடியும் என்று இளக்காரமாக நடத்தினர்.

♥மெது மெதுவாக தனக்கு வரவேண்டிய கூலி தொடர்பான ஆதாரங்களை திரட்டிக்கொண்டார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல் கேட்டார் சம்பந்தபட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் வரவில்லை ஆணையருக்கு மேல் முறையீடு செய்தார்.
விஷயம் கிடப்பில் போடப்பட்டது இனி பெருசு தொல்லை இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த போது ஆணையருக்கு மீண்டும் தகுந்த ஆதாரங்களுடன் கடிதம் எழுதினார்.

♥இதன் அடிப்படையில் ஆணையர் விசாரணை மேற்கொண்டார் சம்பந்தப்பட்ட சங்கரப்பாவையும் ,அலுவலரையும் வரச்சொல்லி விசாரித்தார் உண்மைக்கு துணிச்சல் அதிகம்தானே சங்கரப்பா தனது தரப்பு தகவல்களை அடுக்கடுக்காக எடுத்துவைத்தார் அதிகாரிகளால் முடியவில்லை.

♥செருப்பு கூட போடாமல் வெறுங்கால்களுடன் நடந்து நீதி கேட்டு வந்துள்ள சங்கரப்பா பக்கமே நியாயம் இருக்கிறது அவரை அலையவிட்டதற்கும் அலட்சியப்படுத்தியதற்குமான தண்டனையாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது அவருக்கு சேரவேண்டிய பணத்தையும் உடனே கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.

♥சங்கரப்பாவிற்கு தனது வேலைக்கு ஏற்ற கூலி கிடைத்தது என்பதை விட நீதி வென்றதில் பெரிதும் மகிழ்ச்சி.
எல்.முருகராஜ

Post a Comment

0 Comments