♥அடுத்தவர் தும்மலில் சகுனம் பார்க்கிற நாம்தான் தமக்கு வேண்டியவரின் தும்மலில் நூறு, இருநூறு என ஆயுளை கூட்டி சொல்கிறோம்.
♥ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்திற்காகத்தான் எனும்போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.
♥ சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.
♥ சமூகம் மலடி என அழைப்பவளையும், அம்மா என்று அன்போடு அழைக்கிறான் பிச்சைக்காரன்.
♥இயற்கையை அழித்த மனித இனம், தன் சாவுக்கு இயற்கை மரணம் என போட்டுக்கொள்வது விசித்திரமாக இருக்கிறது.
♥ நம்மாலேயே காக்க முடியாத ரகசியத்தை இன்னொருவர் காப்பார் என எப்படி நம்புகிறோம்?.....
0 Comments
Thank you