♥பெண்ணாய் ஒருவள் பிறந்திட்டால்
♥அவள் மகளாக சகோதரியான நிலையில் தன் தகப்பன் மற்றும் சகோதரர்களின் தேவைகளை அதாவது தாயுடன் இணைந்து சமையல் மற்றும் சாமான் துலக்குதல் வீட்டை சுத்தப்படுத்தல் துணிகளை துவைத்தல் இன்னபிற வேலைகள் தாயில்லா நிலையில் அவள் தான் குடும்ப ஆண்களுக்குத் தாய்
♥கடைக்குச் செல்வதும் காய்கறி வாங்குவதும் கணவணை இழந்தவள் குடும்பத்தை கட்டிச் சுமப்பதும் என அவள் சிறகுகள் விரிகின்றன.
♥திருமணம் ஆனவுடன் கணவனுக்கும் பின் கணவன் மற்றும் அவன் பிள்ளைகளுக்கும் என அனைத்து வேலைகள்
♥இதனுடன் படிப்பு மற்றும் அலுவலகப் பணிகள் (வேலைக்குச் சொல்வோருக்கு)
♥படித்த மற்றும் பணிக்கு செல்லும் கணவன் மனைவியாயினும் அலுவலகம் இருந்து திரும்பி வந்த பின் அவள் தான் சமையல் செய்கிறாள் சாமான் துலக்குகிறாள் அவள் தான் துணி துவைக்கிறாள் அவள் தான் குழந்தைகளுக்குப் பாடு எடுக்கிறாள் அலுவலகம் இருந்து திரும்பி வந்த ஆண் ஹாயாக சோபாவில் சாய்ந்து டிவி ரிமோட் எடுத்து அமர்ந்து விடுகிறான்,,,,,,,, அடுப்பறையையும் எட்டிப் பார்ப்பதில்லை.
♥கணவனும் மனைவியும் டாக்டர் என்ஜினியர் ஐஏஎஸ் ஐபிஎஸ் என்றாலும் திரும்பி வந்தபின் அவள் மனைவி தானே,,,,,இல்லத்தின் அனைத்து அலுவல்களும் அவளுக்குத் தானே
எப்படிப் பட்ட மகத்தானவள் பெண்.
♥பெண்ணே உன் சிறகுகள்
விரிந்து பரந்தவை அதில்
ஆண்களாகிய நாங்கள்
இளைப்பாறுதல் அடைகிறோம்.
♥அந்தச் சிறகுகளை எல்லாம்
நாங்கள் சிதைக்கிறோம்
உன்னால் தன்னந்தனியாய்
சுதந்திரமாய்க் கூட உலா வர இயலாது
♥பயத்துடன் தான் நீ பாதையில்
பயணிக்கிறாய்
கயவர்கள் ஆண்கள் காரணமாய்
♥பெண்ணே உன் சிறகுகள்
விரிந்து பரந்தவை அதில்
ஆண்களாகிய நாங்கள்
இளைப்பாறுதல் அடைகிறோம்.
-
0 Comments
Thank you