ஆண்களின் காதல்...!!!
ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...!
அழகு தேவை இல்லை அன்பாய்
இருந்தால் போதும்...!
அவள் சிரிக்க குழந்தையாய்
மாறுவான்...!
அவள் அழுதால் தந்தையாய்
மாறுவான்...!
சின்ன பரிசுகளில் சிலிர்க்க
வைப்பான்...!
கட்டி அணைக்கும் பொழுது காமம்
இருக்காது...!
முத்தம் இடும் பொழுது பொய்மை
இருக்காது... !
எட்டி விலகும் பொழுது கண்கள்
குளமாகும்...
விரும்பி வரும் பொழுது தேகம்
புதிதாகும்..!
உலகம் முழுவதும் அவள் தான்...!
அவள் வருகைக்கு காத்திருக்கும்
பொழுது கால்கள் வலிக்காது...!
அவள் நேரம் தாழ்த்தி வந்தால்
கோபம் இருக்காது...!
அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள்
தங்காது...!
காதலிக்கும் வரை காதலி...!
காதல் கல்யாணம் ஆகும் பொழுது
இன்னொரு அம்மா...!
வயதுகள் தளரும் பொழுது காதல்
தளர்வதில்லை...!
அவள் போதும்...!
அவள் மட்டும் போதும்...!
வேறேதும் இல்லை
அவளை விட பெரிய உலகம்...!
0 Comments
Thank you