HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

முப்பது வருஷத்துக்கு முன்னால நாங்க ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா...

♥முப்பது வருஷத்துக்கு முன்னால நாங்க ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா...

♥ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். 

♥பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

♥சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

♥பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

♥மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு சீட்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

♥சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.

♥விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.

♥வழ வழப்பான சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.

♥விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.

♥சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

♥இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.

♥எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.

♥இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.

♥காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

♥விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏

Post a Comment

0 Comments