💕உங்களை #அழாமல் பார்த்துக் கொள்வதற்கு உறவை தேடுவீர்கள் ஆனால் உங்கள் #கண்ணீரை துடைத்து கொள்வதற்கு கூட அவர்கள் உதவுவதில்லை..
#வாழ்க்கையில் அன்பை கொடுத்து ஏமாந்தவர்களை விட அன்பு கிடைக்கிறது என்று நம்பி ஏமாந்தவர்கள்தான் மிக மிக அதிகமானவர்கள்.
உங்களுக்காக வாழ்க்கையில் எதையும் இழப்பேன் என்று சொன்னவர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
உங்கள் இதயத்தில் வலி அதிகமான காயத்தை அவர்கள் தான் ஏற்படுத்தி இருப்பார்கள்.
பொறுமை இல்லாதவர்கள் தான் கோபத்தில் முடி வெடுப்பவர்கள்.
கோபத்தில் முடிவு எடுப்பவர்களுக்கு விட்டு கொடுப்பின் தன்மை புரியாது.
இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் மௌனம் எல்லா தவறுகளையும் மூட்டைகட்டி உங்கள் தோளில் ஏற்றி விடும்.
ஒருகாலத்தில் யாருக்காக மெழுகாக உருகி உருகி
உங்களை இழந்தீர்களோ ..?
அவர்கள் உங்களை நினைத்து கூடப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
இந்த உலகத்தில் யாரோடு சந்தோஷமாக நிம்மதியாக இருப்பதாக நினைக்கிறீர்களோ ..?
அந்த நபர்கள் மூலமாக நிச்சயமாக நிறைய அழுவீர்கள்.
ஏனென்றால் உண்மையான அன்புக்கு இங்கே கண்ணீர் துளிகளும் காத்திருப்புகளும் தான் பரிசாக கிடைத்துக் கொண்டிருக்கிறது
தேவைகளும் ஆசைகளும் நிறைவேறும் வரை தான் இந்த உலகத்தில் உறவுகள்.
0 Comments
Thank you