ஒரு பெரியவர் தட்டு தடுமாறி ரோட்டில் ஓரமாய் நடந்து போய் கொண்டு இருந்தார்..அப்போது ஒருவன் அவரை பார்த்து டூ வீலரை நிறுத்தி அவர் கிட்ட போய் பார்த்தான்..அவரோட கால் கட்டை விரல் நசுங்கி ரத்தம் வந்து கொண்டு இருந்தது..என்ன ஆச்சு தாத்தா என்று இவன் கேட்க வேகமா வந்த ஆட்டோ என் காலில் ஏறிச்சென்று விட்டது என்றார்..எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்தில் இருக்கார் வாங்க கட்டு போட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டு வரலாம் நான் கூட்டி போறேன்னு அவன் சொல்ல வேண்டாம் என்று சொன்ன பெரியவரை வற்புறுத்தி கூட்டி செல்கிறான்..அய்யோ நேரமாகிடுச்சே நேரமாகிடுச்சே என்று பெரியவர் பதற அப்படி என்ன அவசரம் என்று இவன் கேட்க என் மனைவி பசியோடு வீட்டில் இருப்பா அவளுக்கு இட்லி வாங்கி போகணும் என்றார்..என்னங்க உங்க காலில் அடிபட்டு இருக்கு கொஞ்சம் லேட்டா போனால் என்ன திட்டுவாங்களா என்று இவன் கேட்க அவள் ஐந்து வருடம் மனநிலை பாதிக்கப்பட்டு நினைவில்லாமல் இருக்கா தம்பி.. எல்லாம் நியாபகமும் அவளுக்கு மறந்து போச்சி நான் யார் என்றுகூட அவளுக்கு தெரியாது என்றார்..இப்படி இருக்கிறவங்க ஏன் லேட்டா வந்திங்கன்னு எப்படி கேப்பாங்க..உங்களைத்தான் அவங்களுக்கு யாருன்னே தெரியாதே அதனால் கவலைப்படாமல் மெல்லமா போங்க என்று அவன் சொல்ல அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ஆனா அவ யாருன்னு எனக்கு தெரியுமே தம்பி என்றார்..அவன் கண் கலங்கி செல்கிறான்...
இதுவல்லவோ தாம்பத்யம்..💓
0 Comments
Thank you