#வாசகர்_பக்கம்
♥#வருமுன்_காப்போம்!
காய்கறி வாங்க, பஜாருக்கு கிளம்பினேன். போகும்போது, பக்கத்து வீட்டு மாமியையும் அழைத்தேன். மாமியோ, 'கொஞ்சம் இரு, இதோ வந்துடறேன்...' என்றவாறு, அவர் கழுத்தில் இருந்த கனமான தங்க செயினை கழற்றி, பீரோவில் பூட்டினார்.
♥'ஏன் மாமி, செயினை கழற்றிட்டீங்க...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'காலம் கெட்டுக் கெடக்குது... எவன், எந்த நேரத்தில் வந்து செயினை அறுத்துண்டு ஓடுவான்னு தெரியாது...' என்றார்.
♥அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை, ஆள் அரவமற்ற தெரு வழியாக சென்றபோது உணர்ந்தேன்.
பைக்கில் வந்த ஒருவன், மாமியையும், என்னையும் உற்று கவனித்தான். மாமியின் வெறுங் கழுத்தையும், பேன்சி மணிமாலை அணிந்த என் கழுத்தையும் பார்த்தவன், வேகமாக சென்று விட்டான்.
♥வாசகர்களே... திருட்டு, வழிப்பறி பெருகிவிட்ட இக்காலத்தில், திருடர்களை குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை... நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்!
— ஜி.ரிஹானா பர்வீன், வேலுார்.
0 Comments
Thank you