♥தன் மனைவி ஃபேஸ்புக் பாவிப்பதை அதிகமான கணவன்மார் எதிர்க்கிறார்கள். ஆனால் உலகில் உள்ள
பெண்களுக்கெல்லாம் friend Request
அனுப்புகிறார்கள்.
♥பெண்களை உடலை மூடச்சொல்லி
வற்புறுத்துகிறார்கள். ஆண்களும்
பார்வையை தாழ்த்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
♥தனது மகளை பல்கழைகலகத்துக்கு
அனுப்பத் தயங்குகிறார்கள். ஆனால்
பெண் வைத்தியர்கள் சமூகத்தில்
இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.
♥தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க நல்ல
ஆசிரியையைத் தேடுகிறார்கள்.ஆனால்
பெண்கள் தொழில் செய்ய ரோட்டுக்கு
வந்தால் அடங்காதவள் என்கிறார்கள்.
♥பூலான்தேவி இந்திராகாந்தி பெண்மணிகளின் , தைரியத்தையும் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் தமது பெண்கள் கோழைகளாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
♥மொத்தத்தில் பெண்களால் சமூகத்துக்கு
நடக்கவேண்டிய அத்தனை நல்ல சேவைகளும் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், சேவைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவை
அனைத்தையும் எவனுடயதோ மனைவியும், மகளும் செய்ய வேணடும் தன் மனைவி வீட்டில் இருக்கனும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
0 Comments
Thank you