HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

எனக்கானவள் ----சிறுகதை .

எனக்கானவள் ----சிறுகதை .

(சில உணர்வுகளின் ஊர்வலம் )

மும்பை கடற்கரை .மெரினாவின் இளைய சகோதரன் .வழி தேடி வந்தவர்களை மடி தாங்கும் தாய்.பிழைப்புக்காக மும்பை நகர்ந்தவர்கள் எளிதில் வெறும் கையுடன் திரும்ப மாட்டார்கள் .இங்கே கலப்பு வாழ்க்கை முறை தான்.இந்த ஊரில் ஒரு வெளிநாட்டு கம்பேனியில் வேலை பார்க்கும் 43453 பேர்களில் நானும் ஒருவன் பெயர் குணா என்கிற குணசீலன்.என்னுடைய ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்ததை நம்பி தான் கோவையில் என் தங்கச்சி படிப்பும் ,புது வீட்டு கடனும்.பகலும் ராத்திரியும் கலந்த மாதிரி ஒரு வேலை.நடுநிசில தூக்கத்த தேடுற சாதரணமான ஒரு மனிதன் .

என்னோட படிப்பு என்னை ஒரு நல்ல தொழிலாளியா வளத்து விட்டிருக்கு அவ்ளோ தான்.ஒரு குறுகிய வட்டத்துல வாழ பழக்கி இருக்கு.லட்சத்துக்குள் அடங்கி போற சந்தோசங்கள்.தினமும் என் குடும்பத்துக்கு என்னோட பத்து நிமிஷம் போதுமானதாக இருக்குது .அம்மா கூட பேசுற வீடியோ கால் மட்டுமே ஆறுதலா இருக்கு.இன்னும் கொஞ்ச நாள்ல என்னை வெளிநாட்டுக்கு மாத்திடுவாங்க.நகர்ந்துட்டே இருக்கணும் இல்லைன்னா நான் ஒரு இடத்துல நிக்க வேண்டி வரும்.

மும்பை ஒரு பெரிய நகரம் தான்னு தோணுச்சு அவள பாக்குற வரையில் .ஒரே வாரத்துல நாலு தடவை பாத்திருக்கேன் அப்புறம் எப்படி இது பெரிய நகரம்ன்னு சொல்றது .முதல் தடவை ரோட்ல சில நொடிகள் .இரண்டாவது சிக்னல்ல அறுபது நொடிகள் .மூணாவது புக் ஷாப்ல கிட்டத்தட்ட முப்பது வினாடிகள்.அவ கையில ஜெயமோகனின் அறம் .அவளோட வாசிப்பு யானை டாக்டர் மீது நானும் கவனிச்சேன்.எதுக்காவோ அவள அவ்ளோ புடிச்சிருந்தது.ஸ்கூல் லைப்ல ஆனந்திக்கு பிறகு இவள தான் இவ்ளோ விரும்பி பாத்திருக்கேன் .

கடைசியா மும்பை பீச்ல.படபடக்குற புறாக்கள் மத்தியில் .இரவுகள் பெரும்பாலும் கடற்கரைகளின் சாபங்கள்.அத்துமீறல்களின் உச்சமாகவும்,ஆணுறைகளின் எச்சமாகவும் தான் இருக்கும் .நான் அவள பார்த்தது மாலை நேரம் .அவ எனக்குள்ள தனியா தெரிய முக்கிய காரணம் அவளோட கதர் சேலைகள்.எந்த விதமான செயற்கை கலக்காத ஒரு உண்மையான அழகி .ஒரு அருமையான தமிழ்ப்பொண்ணு.அவள் பெயர் மகிழினி.

நாலு தடவை சுலபமா பாத்துட்டேன் அஞ்சாவது தடவைக்காக நாப்பது நாள் காத்திருக்க வேண்டி இருந்தது.அந்த காத்திருப்பு எனக்குள்ள பல கேள்விகளை எழுப்பியது.அந்த நாலு இடத்தையும் நானுறு தடவை போய் பாத்திருக்கேன் .கடைசியா அவள அதே புக் ஷாப்ல பாத்தேன் .இப்போ அவ கையில அணிலாடும் முன்றில்.நா.முத்துக்குமார் தன்னுடைய மகனை தோளில் சுமந்தபடி இருந்தார் .காத்திருப்பு கொடுமையானது .ஒரு சில நிமிட ஒத்திகைக்கு பிறகு அவள் முன்னாடி போய் நின்னு "உங்கள ரொம்ப புடிச்சிருக்கு .உங்க கூட பேசலாமா ?"என்றதும் புத்தகம் வாசிப்பதற்கான தனியறையை கை காட்டினாள் .இருவரும் உட்புகுந்தோம்.அவள் என்னை பார்த்ததும் என்னை பற்றிய முழு விபரம் சொன்னதும் அவள் என்னிடம் "உங்களோட உணர்வுகள் எனக்கும் வரணும்னு எந்த அவசியமும் இல்லை.விருப்பங்கள் சுதந்திரமானது.முதல்ல நல்ல நண்பர்களா இருப்போம் .உங்க மேல நட்ப கடந்து ஒரு ஈர்ப்பு ஏற்பட்டா என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் "என்றவள் அவளோட போன் நம்பர கொடுத்துட்டு கிளம்பி போனாள் .

நாட்கள் நகர்ந்துட்டே இருந்தது.அவளுடைய அணுகுமுறைகள் தனித்துவம் மிகுந்தது .மும்பையில் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல விரிவுரையாளர் வேலை.நல்ல சம்பளம் .அவ படிச்சு முடிச்ச புத்தகங்கள் எல்லாம் என்கிட்ட கொடுத்து படிக்க சொன்னா.எனக்கு புத்தகங்கள் முதலில் கடினமானதாகவும்,பின்பு எளிமையானதாகவும்,நாளடைவில் பிரியமானதாகவும் மாறியது .அது ஒரு உலகம் .நிறம் மாறும் உலகம் .காகிதங்களுக்குள் ஒரு உயிர் நடமாடுவது போன்ற உணர்வு.அவளை சந்திக்கும் தருணங்களில் புத்தகங்கள் மட்டுமே பரிமாறப்பட்டு கொண்டு இருந்தது.

அவளுடைய நண்பனின் திருமணத்தில் நானும் அவளுமாய் கலந்து கொண்டோம் .வழக்கத்துக்கு மாறாய் அன்று அவள் பட்டு சேலை கட்டியிருந்தாள்.அவளுக்காகவே அத்தனை பட்டுபூச்சிகளும் உயிர்தியாகம் செய்து கொண்டன போல.நீண்ட அடர்ந்த கூந்தல் வனத்தில் ஒற்றை ரோஜா.அவள் எனக்கானவள் என்ற உரிமை நேர்மையாய் கண் பார்த்து ரசித்தேன்.

என்னுடைய கண்களை உணர்ந்தவளாய் மார்பு சேலையை சரி செய்து கொண்டே"உன்னுடைய பார்வை கழுத்து வரை இருந்தால் அது காதல்.அதுக்கும் கீழ நீ என்னை பாத்தா நான் நிரிவாணமா நிக்குற மாதிரி தோணும் "என்ற போது நான் விலகி நின்றேன்.முகம் வாடி போனது .இவளுக்குள் இதுவரை நான் இல்லை.என்னை மற்ற ஆண்களின் பார்வைகளோடு ஒப்பிடுகிறாள்.நான் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் விதைக்கவில்லை.

அவள் என்னுடைய பார்வையில் சற்று விலகியே இருந்தாள் .அன்று இரவு மெளனமானது.எந்த வாகன ஒலியும் செவியை தாண்டவில்லை.அவளும் நானும் மட்டும் அந்த சாலையில் போய்க்கொண்டு இருக்கிறோம் .வீடு வருவதற்குள் ஒரு தெருமுனையில் நிறுத்திவிட்டு நடந்து போகலாம் என்றாள் .நானும் சம்மதித்தேன் .சாலையோரம் மட்டுமே இரண்டு மெழுகுவர்த்தி வெளிச்ச கடைகள் .அயர்ந்து தூங்கும் கான்கிரீட் குடிசைகள்.அந்த அமைதிக்கு ஒரே சத்தம் வளையல் சத்தமும் .பட்டின் உராய்வும் தான்.அவள் மெதுவாய் "எனக்கு தெரியும் நான் சொன்னது உன்னை என்னமோ செய்திருக்கும்.உன் முகம் என்னோட கண்ணாடி மாதிரி.இத்தனை நாள்ல உன்னோட வாழ்க்கை நல்லா புரிஞ்சது .உன்னோடது ஒரு தேடல் .அதுக்குள்ள என்னை மட்டுமே அனுமதிக்க முடிஞ்சது எனக்கும் புரிஞ்சது "என்றதும் அவளை அன்று புதிதாக உணர்ந்தேன் .

எனக்கு அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி இருந்தேன் .அவள் பேசுவதை கேட்டு கொள்வதில் ஆர்வமாய் இருந்தேன் .ஆனால் வீட்டின் வாசல் வரை எனக்கான எதுவும் அவள் பேசவில்லை .அவள் வீட்டு வாசலில் நின்றபடி"சரி பத்திரமா போய்ட்டு வா.காலையில கூப்புடுறேன் "என்றவள் காலிங் பேல்லில் இருந்த கையை வேகமா எடுத்து என் பக்கத்துல வந்து நின்னு "ப்ளிஸ் குணா என்னை கிஸ் பண்ணு "என்றபடி கண்களை மூடி கொண்டாள் .நான் அதிர்ச்சியில் இருந்தேன் .மூச்சு விடவே கஷ்டமானது மாதிரி இருந்தது.நான் சிலை மாதிரி நின்னுட்டு இருந்தேன் .

அவ தன்னோட கண்ண திறந்து "நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் .எனக்கு உன்கிட்ட உரிமை ஏற்படுது .என்கிட்ட நீ உன் உரிமைய எடுத்துக்கோ "என்றதும் யோசிக்காமல் அவளோட உதட்டில் முழுசா தடம் பதித்தேன்.அவ என்னை முழுமையா ஏத்துகிட்டா.உதடு மட்டும் இல்ல மூச்சு காத்தும் கலந்து தான் இருந்தது.எத்தனை நிமிஷம்னு தெரியல .ஆனா நாங்க பிரிய முடியாம இருந்தோம் .உதடுகள் மட்டுமல்ல உள்ளங்களும் கலந்து கொண்டு இருப்பதை உணர்ந்தோம் .

பக்கத்து வீட்டு கிளியின் கூச்சல் எங்களை பிரித்து வைத்தது .என்னோட உதட்டுல இன்னும் கொஞ்சம் கதகதப்பான அந்த ஈரம் காயல.நானும் காயனும்னு விரும்பல .அவ காலிங் பேல் அழுத்தியதும் நான் கிளம்பி போயிட்டேன் .உண்மைய சொன்னா அன்னைக்கு தான் சிறப்பா தூங்குனேன்.

அவளோட போனுக்காக காத்துகிட்டு இருந்தேன் .வேலைக்கு கிளம்பும் போது தான் போன் வந்தது .எடுத்ததும் அவ "இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வா குணா"என்றபடி போனை துண்டித்தாள்.எனக்குள்ள பல கேள்விகள் .அவளோட வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என் வீட்ல பேசணும் .எனக்கு டைம் வேணும்.அதை ஏன் அவ கேக்கல ?நான் மறுபடியும் போன் பண்ணினேன் .அவ எடுக்கல .தொடர்ந்து பண்ணினேன் எடுக்கல .மனசுக்குள்ள அவ மேல கோபம் .உரிமையான கோபம் .என் வீட்ல பேசினேன் .அம்மாகிட்ட இருந்து ஆரம்பிச்சேன் .அப்பாவோட அதட்டல்.தங்கச்சி அழுகையில முடிஞ்சது .குழம்பி போனேன் சாய்ந்திரம் அவ வீட்டுக்கு போக தோணல .நிறைய யோசிச்சு நல்ல காரணமா தேடி அதை சொல்ல போன் பண்ணினேன் .எடுக்கல .இரண்டு நாள் ஆச்சு .காலேஜ்க்கு போயிட்டேன் .காத்துட்டு இருந்தேன் .எவ்ளோ நேரம்னு தெரியல .அவ வரல .அவ லீவ்ல இருக்குறதா சொன்னாங்க .காரணம் யாருக்கும் தெரியல .

மறுபடியும் இரண்டு நாள் கழிச்சு புக் ஷாப்ல இருந்தா.ஆனா அவ வேற மாதிரி இருந்தா.நான் பக்கத்துல போனதும் எழுந்து போக நினைச்சா .தடுத்து நிறுத்தியதும் அவ "அன்னைக்கு ஏன் வர முடியலைன்னு உன்கிட்ட ஒரு நல்ல காரணம் இருக்கலாம் .என்கிட்ட உன்னை இத்தனை நாளா ஏன் பாக்க முடியலைன்னு சொல்றதுக்கு ஒரே காரணம் தான் எனக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் .என்னால போராட முடியல .தடுத்து நிறுத்த முடியல .உன் கூட வாழ ஆசையா இருக்கு.இப்ப நான் எதாவது ஒரு முடிவு எடுத்தா?அது உன்ன பாதிக்கும் .உன் குடும்பத்தையும் .என் குடும்பத்தோட மொத்த கனவா இந்த கல்யாணம் இருக்கு."தன்னோட விரல்களை காட்டிய அவள் "இது எனக்கு நிச்சியம் பண்ணினப்ப போட்டது இன்னைக்கு வரையில் உறுத்திகிட்டே இருக்கு.உள்ளுக்குள்ள ஒருத்தன் .உடம்புல ஒருத்தன் .காதலிக்க மட்டுமே சில பேர் பிறந்திருப்பாங்க நம்மள மாதிரி.போய் உன் வேலைய பார் இன்னும் கொஞ்ச நாள்ல நான் எங்கேயோ இருப்பேன் உனக்குள்ள "என்றவள் என்னை தாண்டி போனாள் .

அவளோட காதல நான் உணர்ந்தது அறுபது நிமிஷம் கூட இருக்காது .சின்னதா ஒரு பக்க கதையை படிச்ச மாதிரி இருந்தது.அவ என்னோட குடும்பத்த மட்டுமே யோசிச்சிருக்கா.சூழ்நிலை எங்களுக்கு சாதகமா இல்ல .நானும் இந்த இழப்ப தாங்க பழகிட்டேன் .

வீட்டுல இருக்குற புத்தகங்கள் முழுவதும் அவளோட வாசனைகள் நிரம்பி இருப்பது போன்ற உணர்வு.அவளோடு இருந்த அனுபவங்களை எழுதி வச்சுகிட்டேன் .தோணும் போது எல்லாம் படிச்சிட்டு இருப்பேன் .அவ ரொம்ப நல்லவ .என்னை அவ ஏமாத்தல.எனக்கு நல்ல காதலியா இருந்திருக்கா.காதல் சுயநலம் இல்லாததுன்னு சொல்லி கொடுத்திருக்கா.அவ என்னை விட்டு பிரியும் போது அழவேயில்லை.அவளோட கண்ணீர் என்னை உடைச்சிரும் தெரிஞ்சு வச்சிருக்கா.

கொஞ்ச வருஷத்தில் என்னோட எல்லா கடமைகளும் முடிஞ்ச பிறகு அவந்திகாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் .என்னோட காதல பத்தியும் ,காதலியையும் பத்தியும் நிறைய நேர்மையா சொன்னேன் .அவளும் "காதல தாண்டி தான் எல்லோரும் வந்து ஆகணும் .ஆனா உங்க காதல் ரொம்ப அழகானது .எனக்கு பொறாமையா இருக்கு.நான் ஏன் அவுங்களா இல்லைன்னு ."என்றதும் அவளை காதலோடு அணைத்தேன் .

எங்கோ ஒரு மூலையில் அந்த நூல் சேலை அணிந்த தேவதையின் நினைவுகளுக்குள் என்றும் உயிர்ப்போடு இருக்கும் என் காதல்.

[பிரிவுகள் நிரந்தரமற்றவை நினைவில் நிலைக்கும் வரை ]

(முற்றும் )

Post a Comment

0 Comments