HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்ணின்_மனதைத்_தொட்டு...எது ஆண்மை..?

♥#பெண்ணின்_மனதைத்_தொட்டு...
எது ஆண்மை..?

♥ ஒரு நல்ல பெண், ஓர் ஆணிடம் எதிர்பார்ப்பது இரண்டு விடயங்களை. 
ஒன்று பாதுகாப்பு, மற்றையது அன்பு. அதற்கு அப்பால் தான் ஏனைய விடயங்களில் எதிர்பார்ப்புக்கள் உருவாகின்றன. இந்த இரண்டு எதிர்பார்ப்புக்களுமே சிறந்த ஆண்மை என்ற வார்த்தைக்குள் அடங்குகின்றன.

♥பொதுவாக எம்மிடம் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, ஆண்மை என்றால் பாலியலில் பெண்களைத் திருப்தி கொள்ள வைப்பது என்று. அது போன்றே ஆஜானுபாகுவான உருவம், திடகாத்திரமான தோற்றம், வீரமான செயற்பாடுகள், துணிவான முடிவுகள் என. 

♥ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை,  அவளது நுண்ணிய உணர்வுகளைக் கூட புரிந்துள்ள, அவளை ஒரு பெறுமதியான பொக்கிஷமாக எண்ணக் கூடிய,  அவளது ஆசா பாசங்களின் எல்லைப் பரப்புக்களை உணர்ந்து வைத்துள்ள, நியாயமான விடயங்களில் அவளிற்காக எதையும் இழக்கக் கூடிய, எந்த நிர்ப்பந்தமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் அன்பு, பாசம், அரவணைப்பு என்பனவற்றில் வித்தியாசம் காட்டாத, அவள் மேல் ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாக்கக் கூடிய ஒருவனையே அவள் ஆண்மகனாகக் கருதுகிறாள்..

♥இதை அவள் விரிவாக அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவளது ஆழ் மனம் இதனையே வேண்டி நிற்கிறது. ஆரம்பத்தில் தந்தையிடம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு, அன்பு என்பன கணவன் என வரும் போது இன்னொரு நிலைக்கு மாறுகிறது. அந்த நிலையில் மனம் அதிகம் எதிர்பார்க்கிறது. உரிமையுடன் எதிர்பார்க்கிறது. நட்புடன் அதனை எதிர்பார்க்கிறது. நிறைந்த நம்பிக்கைகளுடன் அதனை எதிர்பார்க்கிறது. 

♥இந்த பெண்ணின் உணர்வு புலன்களை உணரக்கூடிய, மதிப்பளிக்கக் கூடிய, பொறுப்புடன் உள்வாங்கக் கூடிய ஆண் அந்த பெண்ணுடன் இல்லற வாழ்க்கையில் சதா காலமும் மகிழ்வுடனும், நிம்மதியுடனும் தாம்பத்தியம் நடத்துகிறான். காரணம் அவன் அவள் உணர்வுகளிற்கு கொடுக்கும் முன்னுரிமை, புரிதல். இதனால் அவன் தானாகவே நிறைய விட்டுக் கொடுப்புக்களையும் செய்கிறான். 

♥பெண்ணின் இந்த உணர்வுகளைச் சட்டை செய்யாத, அல்லது உணர்ந்தும் மனதில் கொள்ளாத அல்லது சில நேரங்களில் அவற்றை உள்வாங்கி பல நேரங்களில் அவற்றை புறந்தள்ளுகிற அல்லது பெண் என்பவள் ஆணின் அடிமை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் உருவாகும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்கள் சுயநலம், தங்கள் சுய கெளரவம், தங்கள் சந்தர்ப்பவாதம் எனத் தான் சார்ந்த ஈகோவை முன்னிறுத்தி சிந்திப்பதனால் பெண் பல உள அழுத்தங்களிற்கு, மனச்சோர்வுகளிற்கு, பதட்டக் கோளாறுகளுக்கு உள்ளாகிறாள். 

♥அவள் கனவுகள், அவளது சுயகொளரவம், அவளது கற்பனைகள், அவளது சந்தோசங்கள் என நிறையப் பரிமாணங்களில் அவள் இதனால் காயப்படுத்தப்படுகிறாள். தான் யாரை மலையென நம்பினாளோ அவர் தன்னை அற்பமாக நினைப்பது, மற்றவர்களிற்காக, மற்றவைகளிற்காக தன்னைத் தன் உணர்வுகளை புறக்கணிப்பது என்பது அவளை டிப்ரசிவ் டிசோடர் எனும் உளச்சோர்வு நிலைக்கு கொண்டு சென்று விடும்.

♥டிப்ரசன் என்பது தற்கொலை எண்ணங்கள் வரை அழைத்துச் செல்லக் கூடியது. மிக ஆபத்தானது. அவள் அழகு பொம்மை போல இருப்பாள். ஆனால் அவள் உள்ளம் அழுகி விடும். அதை உணர நிறைய நாட்கள் பிடிக்கும். வாழ்வே வெறுமையானது போல, எல்லாவற்றையும் இழந்தது போல, தனக்கு யாரும் துணையில்லை என்பது போல, தான் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பது போல, எங்கேயாவது தனிமையான இடத்திற்குச் சென்று விடல் வேண்டும் என்பது போல பல உணர்வுகளின் கோர்வையாக மாறி விடுவாள். 

♥இதற்கெல்லாம் அடிப்படை ஆண்கள் பெண்களை முழுமையாக புரிந்து கொள்ள முற்படாமை, ஆண்மை என்றால் என்ன என்ற தெளிவுகள் இல்லாமை. பெண்ணின் உணர்வுகளை நேர்மையாக உள்வாங்காமை. 

♥இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காதல். இது பரும வயதிற்கு சொந்தமான சொத்தல்ல. உண்மையில் காதல் பூத்துக் குலுங்குவதே தாம்பத்தியத்தில் தான். நாட்கள் வருடங்களாக அதிகரிக்க அதிகரிக்க காதல் மேலும் மேலும் படரும் கொடியாக பரஸ்பரம் வளர வேண்டும். உடல் தாண்டிய, உள்ளம் தாண்டிய, ஆன்ம காதலின் பரிணாமத்தில் இவையெல்லாம் நிகழும். நாம் தான் காதல் என்றால் திருமணத்திற்கு முன் என்றும், ஆண்மை என்றால் பாலியல் வலிமை என்றல்லவா புரிந்து வைத்துள்ளோம். 

♥மாற்றம் வேண்டும், எண்ணங்களில் சிந்தனைகளில், உணர்வுகளில் என எல்லாவற்றிலும். பெண் என்பவள் மிகப்பெருமதியான இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பரிசு என்ற எண்ணம் ஆழ்மனதில் பதிந்தால் நிறைய மாற்றங்கள் நிகழும்...

Post a Comment

0 Comments