HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வேகமாக பேருந்து ஓடிகொண்டிருந்தது.

வேகமாக பேருந்து ஓடிகொண்டிருந்தது.

கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. 

இந்த பேருந்தில் தான் ஆர்த்தியும் பயணம் செய்தாள்...

அடிக்கடி தன் கணவரோடு சண்டைபோடுவாள்...
கொஞ்சம் முன்கோபமும் அதிகம்...

விவாகரத்து மனு கொடுப்பது சம்பந்தமாக வழக்கறிஞரை
பார்க்கத்தான் அவள் சென்றுகொண்டிருந்தாள்...

சாலையோர நிறுத்தம் ஒன்றில் பேருந்து நின்றது...

ஒரு வயதான தம்பதியினர் ஏறினர்...

அமர்வதற்கு யாரும் இடம் தரவில்லை...

அந்த வயதான தம்பதியினர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்...

அமைதியாய் இருந்த பேருந்தினுள் அந்த தம்பதியினரால் சற்று சளசளப்பு...

இதை ஆர்த்தி கவனித்து கொண்டிருந்தாள்...

'நல்ல வேலை நாம் விவாகரத்து வாங்க போறோம்...

என்னா வாழ்க்க...

அடிம வாழ்க்க...

தாலி கட்டிட்டா எல்லாத்துக்கும் 
அடிபணிஞ்சி போகணுமோ...

இதோ... பஸ்ஸுல ஏறுனதுலேர்ந்தே சண்ட...
இத்தன வயசாகியும்...

இதுலாம் ஒரு வாழ்க்க...'
 என்று நினைத்து கொண்டாள். 

அடுத்த பேருந்து நிறுத்தத்தில்
ஒரு சிலர் இறங்கிட... ஆர்த்தியின் அருகே இடம் காலியானது...

ஆர்த்தி, அந்த பாட்டியை அமருமாறு கூறினாள்...

அந்த பாட்டி திரும்பி பார்த்து... "நீங்க வந்து உட்காருங்க..."
என்று கூறினார், அந்த தாத்தாவாே...
"நீயே உட்காரு...
எனக்கு ஒன்னும் தேவையில்ல..." என்று கோபமாக கூறினார். 

பாட்டி ஏதும் கூறாமல் எழுந்து சென்று தர தரவென அந்த வயதான தாத்தாவை இழுத்து வந்து ஆர்த்தியின் அருகே அமர வைத்தாள்...

"ஏற்கனவே ஆஸ்பத்திரிக்கி நேரம் ஆச்சு,
உனக்கு  ப்ரஸ்சர் ,
சுகர் -னு வியாதி வேற... இதுல்ல நின்னுகிட்டே வந்தா மயக்கம் போட்டு விழுந்திடுவன்னு உட்கார சொன்னா கோபம் வருதா...??" என்று தாத்தாவை முறைத்தார்,  

இப்போ தாத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. 

பின்னர் பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் பாட்டி தந்திட...

"ரொம்பத்தான் அக்கறை...போ..."என கடிந்துக்கொண்டே தாத்தா சாப்பிட்டார்...

இவற்றையெல்லாம் கவனித்த ஆர்த்திக்கு என்னவோ போலானது...

தன் கணவரை சிந்தித்தாள்...

அவளை அறியாமலே கண்களில் நீர் எட்டி பார்த்தது...

அழகாய்
நடந்தேறியதே
விவாகம்...

சிறு சிறு
விவாதம்...

பிடிவாதமெனும்
நோயாய் 
உருமாற...

மங்கள
விவாகம்,
அமங்கள
விவாக ரத்தாய்
மாறுவது 
வாழ்வியலுக்கே
எதிரான
ஒன்றல்லவா...

கணவன் மனைவிக்கிடையே
போட்டியெழ வேண்டும்...

அன்பு செலுத்துவதில்...

அக்கறை காட்டுவதில்...

இன்னும் அதிகமாய்
ஆர்த்தி
கற்றுக்கொண்டதாகவே
தெரிந்தது...

அடுத்த
நிறுத்தத்தில்
அந்த தம்பதியினர்
இறங்கி
கைகள் கோர்த்தவன்னம்
நடந்து சென்றனர்
மருத்துவமனை நோக்கி...

ஆர்த்தியின் விவாகரத்து வியாதிக்கு
அருமருந்து கிடைத்திருந்தது.

Post a Comment

0 Comments