#அம்மா_என்_தெய்வம்
♥ஏழையாக பிறந்த என் அம்மாவின் கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.
♥வயிறு நிறைய எமக்கு ஊட்டி விட்டு - அடிப்பாணையில் மிஞ்சிய கருகலை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.
♥அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை... நான் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கிடைக்கும் கூலிக்கு வேலைக்கு போவாள்.
♥கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரங்களை பார்த்து இரக்கப்படாத நாள் எமக்கு இருக்கவே இருக்காது.
♥சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும் மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.
♥படலை திறக்கும் சத்தம் கேட்டதும் புழுதியோடு ஓடுவேன். - என்னை
தனிமையில் விட்டு போன கவலையோடு தூக்கி அணைப்பாள்.
♥தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...
♥ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம் கேட்டு வந்த போது - அவள்
என்னை விட்டு போகவில்லை...
♥வாழ்க்கையின் பாதி தூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.
♥எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும் பிராணியாய் நகர்ந்து கொண்டு ... பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்கு தெரியாமலே சிந்தினாள்.எனக்காக....
♥வலியோடு வாழ பழகி விட்ட அவள் ஒரு நாள் காலையில் திண்ணை
ஓரத்தில் எந்த வலியுமின்றி பிரேதமாக கிடந்தாள்.
♥எனக்கு தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே... சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்கு கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.
♥எரிந்து அவள் சாம்பலானாள் - ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம் கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.
♥தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி ஓர் பெண்னை விதவையாக்கிடுவேன்........
0 Comments
Thank you