♥ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?
♥உடல் எடையை அதிகரிக்க சில வழிமுறைகள் :
♥ உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமான, அதே சமயம் கலோரி அதிகம் கொண்ட உணவினை சாப்பிட வேண்டும்.
♥வாழைப்பழத்தை அதிகம் உண்பதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை தேனோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
♥உடல் எடையை அதிகரிக்க தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டை சாப்பிடலாம். அதேபோல் தினமும் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடையை அதிகரிக்கும்.
♥ தினமும் 10 முதல் 15 பச்சை கொண்டைக்கடலையை இரவில் நீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில வாரங்களில் எடை கூடும்.
♥சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழகி கொள்ளுங்கள்.
♥காலையிலும், மாலையிலும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை பாலில் கலந்து சாப்பிடும்போது உடல் எடையை அதிகரிக்கும்.
♥ காலை மற்றும் இரவு நேரங்களில் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.
♥உடல் மெலிவாக இருப்பவர்கள், எள்ளால் தயாரிக்கப்படும் திண்பண்டங்களை சாப்பிட்டு வர சதை பிடிக்கும்.
♥தினமும் இரண்டு கைப்பிடி அளவிற்கு உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.
♥ புரதச்சத்து நிறைந்த உணவுகளான மீன், முட்டை, வெண்ணெய், சீஸ், பன்னீர் போன்றவற்றை வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.
♥விலங்கில் உள்ள புரதச்சத்திற்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் பீன்ஸை சாப்பிட்டு வரலாம். ஏனெனில், பீன்ஸ் உடல் எடையை மிக விரைவில் அதிகரிக்க வழி செய்கிறது.
♥அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுக்கும்போது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது தசை வளர்ச்சியை சீராக்கும்.
♥உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உடல்நலத்தை பாதிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு நம் உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.
0 Comments
Thank you