HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

♥தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

♥தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

♥பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது.

♥6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். மருத்துவர் அனுமதித்தால் 5-6 வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு தரலாம். 6 மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு தர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். நோய் தாக்காது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

♥#தாய்ப்பாலை_நிறுத்துவதை #எப்போதிலிருந்து_தொடக்கலாம்?

ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கட்டாயம். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவை அதிகப்படுத்துங்கள். திட உணவு என்றவுடன் எடுத்த உடனே சாம்பார் சாதம் தருவது இல்லை. கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது இப்படியெல்லாம் 6 வது மாதத்திலிருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

♥ப்யூரி, கஞ்சி, கீர், கூழ், ஸ்மூத்தி, ஜூஸ், சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். களி உணவுகளைக் கொடுக்கலாம். குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவைத் தரலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி உணவுகள் தரலாம். பாயாசம், ஃபிங்கர் ஃபுட்ஸ், சப்பாத்தி, பராத்தா கொடுக்கலாம். படிப்படியாக உணவை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்தது.

♥அதிக குளிர்ச்சியாகவோ அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் உணவைத் தர வேண்டும். சுவையானதாக உணவு இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.

#தாய்ப்பால்_நிறுத்த_என்ன_செய்யலாம்?

♥தாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

♥தாய்ப்பால் கொடுக்காத இடைவேளிகளில் திட உணவுகளையோ திரவ உணவுகளையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வருகையில், இறுதியில் தாய்ப்பால் நிறுத்த வேண்டும்.

#குழந்தைக்கு_எப்படி_புரியவைப்பது?

♥ஒரு வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒன்றரை வயதுக்கு மேல் இருமுறை கொடுத்தாலும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

♥குழந்தையை விளையாட்டில் கவனம் செலுத்த வையுங்கள். 2 வயது முடியும் கட்டத்தில் ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். நீ வளர்ந்து விட்டாய் இனி தாய்ப்பால் உனக்கு தேவையில்லை என அடிக்கடி குழந்தைக்கு சொல்லலாம்.

♥பின்னர் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுங்கள். பின்னர் அதையே 3 நாள் என மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுப்பது போல மாற்றுங்கள்.பின்னர் அதையும் நிறுத்திவிடுங்கள். இப்படி படிப்படியாக குறைப்பது நல்லது.

Post a Comment

0 Comments