HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாய்மார்கள் எவ்வளவு நாட்கள் தாய்பால் கொடுக்க வேண்டும்

♥தாய்மார்கள் எவ்வளவு நாட்கள் தாய்பால் கொடுக்க வேண்டும்

♥குழந்தைகளுக்கு எத்தனை மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

♥குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.

♥குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான்.

♥அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

♥இங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

♥குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும்.

♥ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும்.

♥ஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

♥குழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும்.

♥ஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்

Post a Comment

0 Comments