#தாய்மை உறுதியாகி விட்டதை தன் கணவனுக்கு முதன் முதலில்
வெட்கத்துடன் சொல்லும்
தருணத்தில் #பெண்_அழகாகிறாள் ❤️
முதன் முதலாய் #சேலை உடுத்தி
தெருவில் நடக்கும் போது அந்த
வெட்கத்தில் உதட்டை சுழிக்கும்
போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
அதிகாலையில் வாசலில் #கோலம் போடுகையில் முந்தானையை இழுத்து பாவாடைக்குள் சொருகி தன் வலது
கையை நெற்றியில் துடைக்கும்
நேரத்தில் பெண் அழகாகிறாள்..
அவிழ்ந்த #கூந்தலை அனாசியமாக
அள்ளி முடித்து கொண்டை போட்டு
அடுத்த வேலைக்கு ஆயத்தமாவாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
தன் #மகளுக்கு சிக்கெடுத்து தலை சீவி
அந்த ஜடையை போட சீப்பை தன் தலையில்
வைத்து இரு உதடுகளை முறுக்குவாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்
#சமைக்கும் போது கரண்டியால் ஒரு
சொட்டு குழம்பை உள்ளங்கையால்
நக்கி பார்த்து ஒரு கண்ணை மூடி
ஒரு கண்ணை அகல திறப்பாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
தலைக்குளித்த #ஈரக்கூந்தலில் வழியும்
நீர் பின் பக்க ரவிக்கையில்
நனைந்து அந்த ஈரச்சுவடு தெரிய
கோவிலுக்கு வருவாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்
அரக்க பறக்க எழுந்து #குளித்து ஒரேயொரு
ஸ்டிக்கர் பொட்டுடன் கழுத்தில் கவரிங்
செயினுடன் பேருந்தை எதிர்பார்த்து
தவிப்புடன் நிற்கும் சமயத்தில்
எல்லாம் பெண் அழகாகிறாள்..
#பிரசவ அறையில் பிஞ்சு #குழந்தையை
பெற்ற பரவசப்பில் உதடு கடித்து
கூந்தல் கலைத்து முகம் வெளிறி
தன் கணவனை எதிர்பார்ப்பாளே
அப்பொதெல்லாம் பெண் அழகாகிறாள்
ஏதோ ஒரு #மன உளைச்சலில்
இருகரம் பற்றி நெஞ்சில் புதைந்து
மனம் வலித்து அழுபவனை தாங்கி
மனதை தேற்றி ஆறுதல் சொல்பாளே
அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்
#இடுப்பில் குழந்தையை ஏற்றி
கையில் பருப்பு சாதத்தை பிசைஞ்சு
நிலாவை காட்டியோ தெருவில்
பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுத்துருவேன்
சொல்லியோ #உணவு ஊட்டும்
போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
பேசும் போது #காதில் இருக்கும்
கம்மல் ஆடுவதை பார்த்தால் இவள்
பேசுவதற்காக அது தாளம் போடுகிறதோ என்று நாம் நினைக்கும் போது
எல்லாம் பெண் அழகாகிறாள்..
#துரோகங்களையும்_வேதனைகளையும்
அளவுக்கு அதிகமாக தாங்கிய சமயத்தில்
இன்னும் நடப்பதற்கு ஒன்றும்
இல்லையடா சாமி
ஏமாறுவதற்கு #நெஞ்சில் இடம்
இல்லைடா சாமி என்று
கண்ணில் நீர் தளும்ப
மனதால் #தன்னம்பிக்கை கூடி
திமிர் கூடும் போதெல்லாம்
பெண் அழகாகிறாள்
இல்லை இல்லை
#பேரழகி ஆகிறாள்...!❣️❣️❣️
0 Comments
Thank you