#புதியஉடை_அணிந்து_பார்ப்பதை #தவிர்க்கலாமே!
♥மகளுடைய கல்லுாரி தோழியின் திருமணத்திற்கு, செல்ல நேர்ந்தது. அங்கு, அவளுடன் படித்த சக தோழியர் பலரும் வந்திருந்தனர். அவர்களை, என் மகள் அறிமுகம் செய்து வைத்தாள். 'பேஸ் புக், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்'களில், மகளின் தோழி ஒருத்தியை, விலை உயர்ந்த மற்றும் நவநாகரிக உடையுடன் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
♥ஆனால், அவளோ, திருமணத்திற்கு மிக எளிமையான உடையணிந்து வந்திருப்பதை பற்றி விசாரித்தேன்.
நகரில் உள்ள பெரிய ஜவுளிக்கடை, வணிக வளாகம் ஆகியவற்றிற்கு செல்லும்போது, அளவு சரியாக இருக்கிறதா என்று விதவிதமான ஆடைகளை அணிந்து பார்ப்பது போல், தன் மொபைல் போனில், 'செல்பி' எடுத்து வந்து, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்'கில், 'ஸ்டேட்டஸ்' பதிவு செய்வதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
♥இதேபோல், பலரும், மேற்படி உடைகளை அணிந்து பார்ப்பதால், சரும நோய், தொற்று பிரச்னை வர வாய்ப்புள்ளது. உடை மாற்றும் விஷயத்திலும், பெண்களுக்கு பல பிரச்னை வருகிறது. எனவே, ஜவுளி நிறுவனம் மற்றும் வணிக வளாகம் போன்றவற்றில், பெண்கள் உடை வாங்குவதை உறுதி செய்த பின், அணிந்து பார்க்க அனுமதிக்கலாமே!
— பி.அகிலா, திண்டுக்கல்.
0 Comments
Thank you