HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

வாசலில்... எப்போது... எப்படி கோலம் போடவேண்டும்?

♥வாசலில்... எப்போது... எப்படி கோலம் போடவேண்டும்? 

♥அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.

♥நம் வீட்டு வாசலில் லட்சுமி வாசம் செய்வதால், புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

♥கோலம் போட்டு முடித்ததும் காவியை இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.

♥கோலத்தில், சாணத்தின் பசுமையானது விஷ்ணு பெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன.

♥கோலமிட்ட பின்னர் பூசணி, செம்பருத்தி போன்ற மலர்களை அதன் நடுவே வைக்க வேண்டும். இது நமக்கு செல்வச்செழிப்பை தரும்.

♥பௌர்ணமி நாளன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

♥கோலத்தின் அனைத்து பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

♥கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது.

♥வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிட வேண்டும்.

♥கோலம் போட்டு முடித்த பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.

♥ஆள்காட்டி விரலை தவிர்த்து பிற விரல்களை வைத்துதான் கோலமிட வேண்டும்.

♥தெய்வீக யந்திரங்களை குறிக்கும் கோலங்களை பூஜை அறைகளில் மட்டும்தான் போட வேண்டும். அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும்.

♥சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளை தடுக்கும் வல்லமைகொண்டது.

♥மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு இறைவனை தொழுவது, உடலிற்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்திற்கு எண்ணற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

♥கோலம் போடுவதால் துர்சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது.

♥அரிசிமாவினால் கோலமிடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

Post a Comment

0 Comments