♥#அன்பை_பகிரும்_மக்கள்_சுவர்!
சமீபத்தில், கோவை சென்றபோது, பேருந்துக்காக காத்திருந்தோம். அருகில் இருந்த சுவரில், மர தடுப்புகளால் ஆன, அலமாரி ஒன்று இருந்தது. அதில், பழைய துணிகள், பொருட்கள் காணப்பட்டன. என்னவென்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, அந்த சுவரிலேயே, 'மக்கள் சுவர்' என்ற வாசகத்தின் கீழ், 'அன்பை பகிர்வோம்' என்று எழுதப்பட்டிருந்தது.
♥மேலும், 'தங்களுக்கு தேவையற்றதை விட்டுச் செல்க, தேவையானதை பெற்றுச் செல்க... ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், பொம்மைகள், முதலுதவி சாதனங்கள் மற்றும் இன்னபிற பயனுள்ள பொருட்கள்...' என எழுதப்பட்டிருந்தது.
♥நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிலர், பொருட்களை வைத்துச் செல்வதும், சிலர், எடுத்துச் செல்வதுமாக இருந்தனர்.
♥பார்க்க, மனதுக்கு இதமாக இருந்தது. எல்லா ஊர்களிலும், தன்னார்வலர்கள், இதுபோன்று மக்கள் சுவர்களை ஏற்படுத்தினால், நல்ல பொருட்கள் குப்பைக்கு செல்வது குறையும், தேவையானோருக்கு, தேவைப்படும் பொருட்கள் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்.
— எஸ்.மங்கையர்கரசி, நெய்வேலி.
0 Comments
Thank you