🚬சிகரெட் பேய்கள்🚬
🚬சிகரெட் அறைகளில்
சீரான வெள்ள புடவையணிந்து
ஒற்றை காலில் நின்று கொண்டே
துயில் கொள்ளும் சிகரெட் பேய்கள்...🚬
✨எச்சரிக்கை குறிப்பொன்றை
சிகரெட் அறைகளின் முன்னே..!!
எழுதிவைத்துவிட்டு
ஒன்றாக துயில் கொள்கின்றன...✨✨
✨எங்களின் தூக்கத்தை
கலைக்காதீர்கள்..!! கலைத்தவர்கள்
என்றென்றுக்குமாய்...!!
தூங்க வைக்கப்படுவீர்கள் என்று
எச்சரிக்கை குறிப்பில் எச்சரித்து விட்டு;
வண்ண வண்ண அறைகளில்..!!
வரிசையாக நின்று கொண்டு
துயில் கொள்ளும்....!!!
இந்த சிகரெட் பேய்கள்....🚬🚬🚬
✨தங்களின்
எச்சரிக்கையையும் மீறி..!
தூக்கத்தை கலைத்து
எரித்து.!! புகைத்து..!! தங்களை
கொன்ற மனிதர்களை...💛💛
⭐ஒரு நாள் எரித்து
புதைக்கும் ஆசையில்...!!
மனிதனின் பார்வை படும்படி
உலகத்திலுள்ள கடைகள் தோறும்;
ஒற்றைக்காலில்...!!
நின்று கொண்டிருக்கின்றன..〽〽
🚬வெள்ளை புடவையணிந்த
சிகரெட் பேய்கள்......🚬🚬🚬🚬🚬
0 Comments
Thank you