பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்? அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?
ரொம்ப நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருவர் கேட்ட கேள்வி இது....
அன்பு என்பது எல்லா உயிர்கள் இடத்தும் இருக்கும் பொதுவான பண்பு. அது எல்லோரையும் மயக்கும் சக்தி படைத்தது.
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்த இன்ப சொரூபம்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
அயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்பு கொண் டாடும்.
இப்படி பட்டவர்களிடம் யார்தான் மயங்க மாட்டார்கள்!!
ஆனால்
மயக்கும் சக்தியை விட மயங்கும் சக்தி கவனத்தில் கொள்ளத் தக்கது அது நம் கட்டுப்பாட்டில் இருப்பது. புத்தர் போன்றவர்களை நமக்கு தந்தது.
இந்த மயங்கும் சக்தி அறிவு சம்பந்தப் பட்டது
சென்ற இடத்தால் செல விடாது நன்றின் பால் உய்ப்பது அறிவு
என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஆனால் இது ஊழ்வினையாக வந்து கோவலனை பேரழகியான கண்ணகியை விட்டு மாதவியை நாடி செல்ல வைத்தது
ஆக கண்ணகியிடம் இல்லாதது மாதவியிடம் என்ன இருந்தது?! கலை!!கோவலனின் கலையார்வம்!!
இப்படி பார்க்கும் பொழுது இந்த கேள்வியையும் சேர்த்து ஆணுக்கு எதையோ தேடி திரியச் செய்யும் ஆற்றலை தவிர இயற்கை அன்னை வேறு எதையும் அவனுக்கு தரவில்லை என்று தெரிகிறது...
காதலுக்கு கண்களை கொடுக்காத ஹார்மோன்களின் வேலை என்றும் வச்சுக்கலாம்
சங்க காலத்திலேயே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?! என்று கேட்ட செண்பக பாண்டியனிடம்..
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
என்று இறையணார் கூறுகிறார்...
அதாவது பூக்களிலே சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து தேனுண்டு வாழும் வண்டே! நான் கேட்கிறேன் என்பதற்காக பொய் சொல்ல வேண்டாம் உண்மையைச் சொல் பிறவிதோறும் தொடரும் நட்பைக் கொண்டுள்ள நெருங்கிய பற்களைக் கொண்டுள்ள அழகிய என் தலைவியான இவ்வரிவையின் கூந்தலை விட மணமுள்ள பூவை நீ கண்டதுண்டா?!
அதாவது ஊடலின் பொருட்டு தலைவன் தலைவியை மயக்குவதிற்காக பாடப்பட்ட பாடல் என்று தெரிகிறது.
இப்படி சங்க காலம் முதல் ஆண் பெண்ணை மயக்கி விட்டு பின்னர் பெண்ணிடம் ஏன் ஆண் மயங்குகிறான் என்று கேள்வியும் கேட்கப்படுகிறது.
கட்ட கடைசியில் என்னதான் இன்பம் என்று தேடிச் சென்ற ஆண் ஜென்மம் ஏதோ ஒரு சூழ்நிலையைக் காரணம் காட்ட பெண்களே இனபம் என்ற நிலையைச் சங்க காலம் முதலே சொல்லி சென்றிருக்கிறார்கள்.....
(கேள்வி கேட்ட நண்பனுக்கு - இப்பிடி எல்லா விஷயத்தையும் என்கிட்ட கேட்டு நீ கவிதையா எழுதி ஸ்கோர் பண்ணிருடா 😠😠😠😠😠)
0 Comments
Thank you