HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உண்மை காதல்னா இப்படி தான் இருக்கும்

❤️❤️உண்மை காதல்னா இப்படி தான் இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மதுரை மாவட்டம் அழகாபுரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கணேஷ். வயது 24. கீர்த்தனா. வயது 22. என்பவரை மூன்று வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். கீர்த்தனாவும் கணேஷை உயிருக்குயிராக காதலித்தார்.பெற்றோர்களின் சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது. தாலி கட்டும் நேரத்தில் கணேஷ் எனக்கு கீர்த்தனாவை பிடிக்கவில்லை நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டார்.இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.பிறகு கணேஷை எவ்வளவோ சமாதானப் படுத்தினார்கள் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் கொந்தளித்த கணேஷின் பெற்றோர்கள் எங்களை அவமானப்படுத்திய நீ இனிமேல் எங்களுக்கு பிள்ளையே கிடையாது. இனிமேல் எங்கள் மூஞ்சியில் விழிக்காதே. வெளியே போ என்று கூறிவிட்டார்.

எதற்காக கணேஷ். உயிருக்கு உயிராக காதலித்த கீர்த்தனாவை. தாலி கட்டும் நேரத்தில் வேண்டாம் என்று சொன்னார்.

இவர்களுடைய வாழ்க்கையில் நடந்தது என்ன?

கீழே படியுங்கள்....

மூன்று வருடங்களுக்கு முன்பு. கணேஷ் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த கீர்த்தனா. எதிர்பாராதவிதமாக கணேஷின் மீது மோதி விட்டார். காரணம். அப்போதுதான் கீர்த்தனா ஸ்கூட்டி பழகிக் கொண்டிருந்தார்.

பிறகு. ஆளுக்கு ஒரு திசையில் விழுந்து கிடந்தார்கள். கணேஷிற்கு லேசான காயம் தான். கீர்த்தனாவுக்கு அவருடைய கால் சுளுக்கிக் கொண்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை வலி தாங்க முடியாமல் கத்தினார்.

பிறகு கணேஷ். அவருக்குப் பக்கத்தில் சென்றார். கீர்த்தனா கணேசனை பார்த்து பயந்தார்.ஆனால் கணேஷ். கீர்த்தனாவின் மீது கொஞ்சம் கூட கோபப்படவில்லை. பிறகு. அவருக்கு பக்கத்தில் சென்று. அவருடைய கையைப் பிடித்து தூக்கிவிட்டார்.ஆனால். கீர்த்தனா வால் சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. மறுபடியும் கீழே உட்கார்ந்து விட்டார்.

பிறகு கீரத்தனா. கணேஷை பார்த்து. எப்படியாவது என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று சொன்னார். அதற்கு கணேஷ். நான் உங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடுகிறேன். உங்கள் ஸ்கூட்டியை நான் கொண்டு வந்து வீட்டில் தருகிறேன் என்றார்.

அதற்கு கீர்த்தனா. இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன். என்னை முன்னாள் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு. என் ஸ்கூட்டியை நீங்கள் திருடி விட்டால் நான் என்ன செய்வது என்றார். இதைக் கேட்டதும் ஷாக்கான கணேஷ். கீர்த்தனாவை முறைத்துப் பார்த்தார்.

உடனே கீர்த்தனா. நான் உங்களை ஒன்றும் சொல்லவில்லை. பொதுவாக தான் சொன்னேன். நாட்டில் நிறைய இந்தமாதிரி நடக்கிறது என்று சமாளித்தார்.

கீர்த்தனாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த கணேஷ். அவரை ரசிக்க தொடங்கினார்.மெய்மறந்து கீர்த்தனாவை பார்த்துக்கொண்டிருந்த கணேஷிடம்.எதற்காக இப்படி பார்க்கிறாய். நான் என்ன தாஜ் மஹாலா. இப்படி கண்ணிமைக்காமல் பார்க்கிறாய் என்று கேட்டார்.

பிறகு சுதாரித்துக் கொண்ட கணேஷ். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போது உன்னை எப்படி கொண்டு போய் வீட்டில் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.உடனே கீர்த்தனா என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது.அதற்கு நீ சரிப்பட்டு வர மாட்டியே என்றார்.

அதற்கு கணேஷ். என்னால் முடியும் உனக்கு தைரியம் இருந்தால் சொல் என்றார்.பிறகு கீர்த்தனா. பேச்சு மாறக்கூடாது. சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

உடனே கணேஷ். நீ அது என்னவென்று சொல்லு. என்னால் செய்ய முடியும் என்றார்.பிறகு கீர்த்தனா. கணேசனை பார்த்து. என்னை அப்படியே தூக்கி என் ஸ்கூட்டியில் வைத்து. பிறகு அதை ஓட்டிச் சென்று என் வீட்டில் விட்டுவிடு என்றார்.கீர்த்தனா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கணேஷிற்க்கு. ஏதோ ஒரு சந்தோசமான உணர்வை கொடுத்தது.

பிறகு கணேஷ். கீர்த்தனாவை கொண்டு போய் வீட்டில் விட்டார். அங்கே அவருடைய பெற்றோர்கள், கணேஷை பாராட்டினார்கள்.கணேஷிற்கு கீர்த்தனாவின் தாயார் டீ போட்டுக் கொடுத்தார்.அதன்பிறகு கணேஷ். தன் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் கணேஷ் தன்னுடைய மனதை கீர்த்தனாவிடம் பறிகொடுத்து விட்டார்.வீட்டிற்கு வந்ததிலிருந்து கீர்த்தனாவின் நினைப்புதான்.

அந்தப்பக்கம் கீர்த்தனா விற்கும் அதே கவலைதான்.

கணேஷின் நினைப்பு அவரை வாட்டியது ஒருமுறைதான் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ உயிரே பிரிந்தது போல. இருவரும் ஒருவருக்காக ஒருவர் ஏங்கத் தொடங்கினார்கள். அதுதானே காதல்....

பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே மூன்று நாட்கள் ஓடி விட்டது

இதற்கு மேல் கீர்த்தனாவை பார்க்காமல் நம்மால் இருக்க முடியாது என்று நினைத்த கணேஷ். ஒரு திட்டம் போட்டார்.

நான்காவது நாள் காலை. கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்று. கீர்த்தனாவை பார்த்து. அன்று கீழே விழுந்தபோது என்னுடைய செல்போன் எங்கோ விழுந்து விட்டது. நானும் அந்த இடத்தில் சென்று தேடினேன் உங்கள் கண்ணில் ஏதும் பட்டதா என்று கேட்டார்.

கணேஷ் எதற்காக இப்படி சம்பந்தமில்லாமல் பேசுகிறான். என்று யோசித்த அவருக்கு அப்போதுதான் புரிந்தது. இவன் நம்முடைய செல்போன் நம்பரை கேட்கிறான் என்று. பிறகு கீர்த்தனா. அதெல்லாம் நான் ஒன்றும் பார்க்கவில்லை. வேண்டுமென்றால் உன் நம்பரை கொடு. என் செல்போனிலிருந்து போன் போன் செய்து பார்க்கிறேன் என்றார்.

இதைக்கேட்டதும் உற்சாகமடைந்த கணேஷ். நம் திட்டம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு. தன்னுடைய செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்தார்.கணேஷின் செல்போன் நம்பரை வாங்கிய கீர்த்தனா. கொஞ்ச நேரம் இங்கேயே இரு. என்னுடைய செல்போன் ரூமில் இருக்கிறது. நான் அங்கு சென்று போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆனால் கணேஷ் தன்னுடைய செல்போனை சைலன்ட் மோடில் போட்டு வீட்டில் வைத்துவிட்டு தான் வந்தார்.மூன்று நிமிடங்கள் சென்றது. ரூமில் இருந்து வெளியே வந்த கீர்த்தனா. நான் உன் நம்பருக்கு கால் செய்து பார்த்தேன் ஆனால் யாரும் எடுக்கவில்லை. எனக்கென்னவோ அது நம் விழுந்த இடத்தில் தான் கிடக்கிறது என்று நினைக்கிறேன். உடனே போய் தேடு என்றார்.

இதைக்கேட்டதும் உற்சாகமடைந்த கணேஷ். வீட்டிற்கு ஓடினார். நம் காதலியின் நம்பர் கிடைத்துவிட்டது. அவரிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்று யோசித்துக் கொண்டே சென்றார். அவர்.வீட்டை சேர்ந்ததும். உற்சாகத்தோடு தன்னுடைய செல்போனை எடுத்துப் பார்த்தார். அதில் ஒரு மிஸ்டு கால் கூட இல்லை.இதனால் கவலையான கணேஷ். தலையில் கையை வைத்துக்கொண்டு படுத்துவிட்டார்.

அப்போது அவர் நினைவில் ஓடியது.போன் செய்தேன் என்று சொன்னாரே. ஏன் செய்யவில்லை. ஒருவேளை நெட்வொர்க்கில் ஏதும் பிரச்சனை இருக்குமோ என்று கணேசனுக்கு சிந்தனை வலுத்தது.

பிறகு அவர். நம்மை கீர்த்தனாவிற்கு பிடிக்கவில்லையோ. சரி பரவாயில்லை. இனிமேல் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தார்.

ஆனால் அன்று இரவு 10 மணிக்கு கணேசனின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.பிறகு அவர் அதை எடுத்துப் பார்த்தார். அதில் ஒரு புதிய நம்பரில் இருந்து தான் அந்த மெசேஜ் வந்திருந்தது. பிறகு அதைப் படிக்கத் தொடங்கிய அவரோட கண்களிலிருந்து நீர் வழிந்தது.

அதில் டேய் திருட்டு பயலே. என் செல்போன் நம்பரை தெரிந்துகொள்வதற்காக திட்டம் போட்டாயா. உன்னைப்பற்றி எனக்கு தெரியும். அதனால் தான் இவ்வளவு நேரம் உன்னை கதற விட்டேன்.உன்னை பார்த்த அந்த முதல் பார்வையிலேயே. நான் என்னை மறந்து உன்னிடம் காதலை சொல்லி விட்டேன்.ஒவ்வொரு நொடியும் உனக்காக காத்திருக்கிறேன். என்னமோ தெரியவில்லை. உன்னை உயிருக்கு மேலாக நேசிக்கிறேன். நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன் போலிருக்கிறது. என்னைத் தவிர நீ இன்னொரு பெண்ணை கனவில்கூட நினைத்துப் பார்க்கக் கூடாது. ஐ லவ் யூ. என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கனேஷ்.கீர்த்தனா.
அதன் பிறகு கணேசன் கீர்த்தனாவுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில் நீர் இல்லாத நிலத்தில் எப்படி மனிதனால் வாழ முடியாதோ. அதே போல் தான். என்னாலும் உன்னை பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியாது.ஐ லவ் யூ என்று அனுப்பினார்.

பிறகு கணேஷிற்கு ஏதாவது ஒன்று என்றால் கீர்த்தனா வால் தாங்கமுடியாது. அதேபோல் கீர்த்தனா விற்கு ஏதாவது ஒன்று என்றால் கணேஷ் துடித்து விடுவார்.

இப்படியே மூன்று வருடங்கள் ஓடியது.

இரு வீட்டாருக்கும் இவர்களுடைய காதல் தெரியவந்தது. பிறகு அவர்களும். நம் பிள்ளைகளின் சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்து. இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டார்கள். தேதியும் குறித்து விட்டார்கள்.அந்த நேரத்தில். காதலர்கள் இருவரும் சந்தோசத்தில் மிதந்தார்கள். அவர்களைச் சுற்றி பட்டாம்பூச்சி பறப்பது போலிருந்தது. எங்களைப் போலவே எல்லாக் காதலர்களுக்கும் வாழ்க்கை அமைய வேண்டும் என்று இருவரும் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் கணேஷ் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது தான் கணேஷின் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது.

ஒருநாள் கணேஷிற்கு திடீரென்று கை கால்கள் வீங்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த கணேஷ். ஏதாவது பூச்சி கடித்து இருக்கும் அதனால் தான் இப்படி இருக்கிறது என்று நிணைத்து அலட்சியமாக இருந்தார்.

கணேஷிற்கு திருமணம் நடப்பதற்கு இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கிறது. பிறகு கணேஷ் இந்த நேரத்தில் என்ன இப்படி வருகிறது என்று நினைத்து. மெடிக்கலில் சென்று மருந்து வாங்கிப் போட்டார். ஆனால் வீக்கம் வத்தவில்லை. அவருடைய உடலில் சோர்வு ஏற்பட்டது. இன்னும் பல இன்னல்களை சந்தித்தார்.

அந்த நேரத்தில் தன்னுடைய ஊரில் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய கணேஷ்.தன்னுடைய உடல்நலக்குறைவால் சென்னையிலேயே இருந்துவிட்டார். காரணம். திருமண நேரத்தில் இது வீட்டுக்கு தெரிந்தால் அனைவரும் கவலைப் படுவார்கள். அதனால்.இந்த நிலையில் கணேசின் நண்பன் அசோக். கணேசனை பார்த்து. நண்பா இதை பார்த்தால் பூச்சிக்கடி மாதிரி தெரியவில்லை. அதனால் நம் ஹாஸ்பிடலுக்கு சென்று டாக்டரை பார்த்து விடலாம். நாளை மறுநாள் உனக்கு திருமணம். புரிந்து கொள் என்று வற்புறுத்தி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர். கனேஷை பார்த்து. மனதை தைரியப் படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய இரு சிறுநீரகங்களும் செயல்படவில்லை.அதனால். நீங்கள் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும்.இனிமேல் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.உங்களால் சாதாரண மனிதனைப் போல் இருக்க முடியாது. சாப்பாடு கூட உப்பில்லாத பத்தியம் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். அதனால் மனதை தைரியப் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

இதைக்கேட்ட கணேஷிற்கு தூக்கிவாரிப்போட்டது.பிறகு வீட்டிற்கு வந்து அழுதுகொண்டிருந்த கணேஷிடம். அசோக். நண்பா அழுது புண்ணியமில்லை. நாளை மறுநாள் அதிகாலை உனக்குத் திருமணம் புறப்படு ஊருக்குச் செல்வோம் என்றார்.

ஆனால் கணேஷிற்க்கு சிறுநீரக செயலிழப்பு என்றால் அதனுடைய விளைவுகள் எப்படி இருக்கும். அதை சந்தித்த மனிதர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாமே தெரியும்.

இதனால் மனமுடைந்து போன கணேஷை அவருடைய நண்பன் அசோக் ஒருவழியாக சமாதானப்படுத்தி.அடுத்த நாள் காலை இருவரும் ஊருக்கு கிளம்பினார்கள். கணேஷிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை ஒரு வாடகை காரில் அழைத்துக் சென்றார் அசோக்.

செல்லும் வழியில் கணேஷ். நமக்கு இந்த திருமணம் நடந்தது என்றால் கீர்த்தனாவின் வாழ்க்கை பாழாகிவிடும். அவரை நாம் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தோம். இந்த நேரத்தில் நமக்கு திருமணம் நடந்தால். காலம் முழுவதும் அவள் கஷ்டப்பட வேண்டும். எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். நமக்காக அவள் சந்தோசத்தை இழக்கக்கூடாது. என்று தனக்குத்தானே யோசித்தார்.

ஒரு பக்கம் அவருக்கு நம் காதலியை பிரியப் போகிறோமே என்கிற கவலையும். மறுபக்கம். நம்மைப்பிரிந்தால்தான் கீர்த்தனாவால் சந்தோசமாக வாழமுடியும். என்கிற சந்தோஷமும் அவருடைய சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்தது. இருவரும் அன்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தார்கள். அப்போது மணி இரவு 11.

கணேசை அந்த நிலையில் பார்த்த அவருடைய பெற்றோர்கள் கதறினார்கள். வெகு நேரம் பயணம் செய்ததால். கணேசன் அந்த நேரத்தில் அவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை.பிறகு கணேசை. ரூமுக்குள் சென்று படுக்க வைத்தார் அசோக். பிறகு அசோக்கிடம் அவளுடைய பெற்றோர்கள். என் மகனுக்கு என்ன ஆனது என்று கேட்டார்கள். அப்போது அசோக். உண்மையை சொன்னால் தன் நண்பனின் திருமணம் நின்று விடும். கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்வதற்காகதானே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அதனால் இந்த உண்மையை மறைத்து விடுவோம் என்று நினைத்தார். பிறகு அவர்களைப் பார்த்து. அதெல்லாம் ஒன்றுமில்லை. கணேசை ஏதோ பூச்சி கடித்து இருக்கிறது. நாங்கள் மருத்துவரை பார்த்துவிட்டுத்தான் வந்தோம் என்று கூறினார். ஆனால் அசோக்கின் மனதிற்குள்ளும் கவலைதான். தன் நண்பனின் திருமணம் முடியட்டும் அதற்குப்பிறகு அசோக்கின் பெற்றோர்களிடம் சொல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அந்த வீடே திருமணக்கோலத்தில் ஜொலித்து இருந்தது. பிறகு அடுத்த நாள் காலை எழுந்த கணேஷ். நம் பெற்றோர்களிடம் இதை சொன்னால். இதெல்லாம் ஒரு வியாதி கிடையாது. முதலில் திருமணம் நடக்கட்டும். அதன்பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என்று சொல்வார்கள் என்று நினைத்த கணேஷ்.நம்மை திருமணம் செய்துகொண்டு நம் காதலி கஷ்டப்படக்கூடாது என்று ஒரு திட்டம் போட்டார்.

தாலி கட்டுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு அனைவர் முன்னிலையிலும். எனக்கு கீர்த்தனாவை பிடிக்கவில்லை. என்னை கட்டாயப்படுத்தி தான் என் பெற்றோர்கள் இந்த திருமணத்தை நடத்துகிறார்கள் என்று கூறி அனைவரையும் அதிர வைத்து விட்டார். இதைக் கேட்டதும் கொந்தளித்த கனேஷின் பெற்றோர்கள்.கனேஷை எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்கள் ஆனால் கணேஷ் பிடி கொடுக்கவே இல்லை. இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கணேசன் அப்பா. இனிமேல் எங்கள் கண்முன்னாலேயே நிற்காதே இங்கிருந்து உடனே சென்று விடு என்று கூறிவிட்டார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த கணேஷ். சிறிது தூரம் அந்த தெருவில் சென்று கொண்டிருந்தார்.ஆனால் இது எதையும் கீர்த்தனா நம்பவில்லை. என் உயிர் என்னை விட்டு பிரிந்து போகிறதே. நான் என்ன செய்யப் போகிறேன் என்று கதறினாள். இதையெல்லாம் பார்த்த அசோக். தன் நண்பன் தன் கண்முன்னாலேயே வீட்டை விட்டு செல்வதை அவரால் தாங்க முடியவில்லை. உடனே அவர்களிடம் எல்லாம் நடந்தது அனைத்தையும் கூறி. இந்த காரணத்திற்காக தான் அவர் திருமணம் வேண்டாம் என்று சொல்லி உங்களை விட்டு பிரிந்து செல்கிறார் என்று சொல்லி அழுதார். பிறகு. அவர்கள் ஓடிச்சென்று கணேஷை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

அப்போது கீர்த்தனா. எது நடந்தாலும் சரி. நான் உன்னை மட்டும் தான் திருமணம் செய்வேன். அதற்காக எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டார். பிறகு இருவருக்கும் அதே முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments