HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு ஆணின் நேர்மை

♥ஒரு ஆணின் நேர்மை

♥''ப்ளீஸ் உட்காருங்க...'' எதிரில் நின்ற, சுந்தரியிடம் சொன்னார், வங்கி கிளை மேலாளர், சத்யன். அளவான, 'மேக் -அப்'பில் வளமான அழகுடன் இருந்த சுந்தரிக்கு வயது, 30; திருமணமாகாதவள்; பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கண்கள் அவளுக்கு! மேனேஜரிடம் தான் பேச வேண்டும் என்று பிடிவாதமாக அனுமதி பெற்று, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

♥''என்னை பாக்கணும்ன்னு சொன்னீங்களாம்... ஏன் அசிஸ்டென்ட் மேனேஜரையே பாக்கலாமே... அவர் உங்களுக்கு உதவுவாரே...'' என்றார், சத்யன்.
''தெரியும்; ஆனா, அது, எனக்கு பிரச்னைய கொடுக்கும்...'' என்றவளை, 'ஏன்...' என்பது போல் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தார், சத்யன்.

♥''ஆமாம் சார்... அத, நீங்களே அப்புறம் புரிஞ்சுப்பீங்க... பை தி பை ஐ ஆம் சுந்தரி...'' என்று தெளிவான ஆங்கிலத்தில், தேனாக பேசி, தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
''சரி... சொல்லுங்க என்ன வேணும்?''
''ஹவுசிங் லோன்; 20 லட்சம் ரூபாய் தேவை...''
''ஷ்யூர்...அதுக்கான பேப்பர்ஸ் வேணுமே...''
''என்னென்ன பேப்பர்ஸ் கொடுக்கணும்...''
''உங்க ஆதார் கார்டு, 'இன்கம்' புரூப்... அப்புறம், உங்க சொத்து மதிப்பு.''
சில நொடிகள் யோசித்தவள், ''சார்... என்னோட வருமானம், மாசம், ரெண்டு லட்சம் ரூபா; ஆனாலும், புரூப் தர முடியாத நிலையில இருக்கேன்,'' என்றாள்.

♥சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'ரெண்டு லட்சம் ரூபாய் வருமானம் என்றால், பெரிய கம்பெனியில், பெரிய போஸ்ட்டிங்கில் இருப்பவளா அல்லது நடிகையா... ஒருவேளை அரசியலில் இருப்பவளோ இல்ல வட்டி தொழில் நடத்தும் பைனான்ஸ் ஏஜென்டா...' என பலவாறாக எண்ணியவர், ''புரூப் இல்லன்னா, எந்த வகையில வருமானம் வருது...'' சந்தேகமாக கேட்டார்.

♥பூவாய் சிரித்தவள், ''நீங்க, கண்டு பிடிச்சிடுவீங்கன்னு நெனச்சேன். பரவாயில்ல; நான் பாலியல் தொழிலாளி,'' என்றாள்.

♥இதைக் கேட்டதும் சத்யனுக்கு தூக்கிவாரி போட்டது. 'விலைமாதிடமா இவ்வளவு நேரம் பேசினோம்...' என, நினைத்தவருக்கு, ஏதோ தவறு செய்து விட்டது போல், அவமானமாக உணர்ந்து, அவளை பார்ப்பதை தவிர்த்து, தலையை குனிந்து கொண்டார்.

♥''ஏன் சார்... நான் உண்மைய சொன்னதும் தலைய குனிஞ்சுட்டீங்க... நான் ஒண்ணும் பாக்கவோ பழகவோ கூடாத ஜந்து இல்லயே... நான், கொலை செய்யல, கொள்ளை அடிக்கல, பொய் சொல்லி யாரையும் ஏமாத்தல... மனச கல்லாக்கி, என் உடம்பை அழிச்சு, பலருக்கு வடிகாலா இருக்கேன். பாலியல் தொழிலாளிங்கிறதால நான், எந்த உணர்ச்சியும் இல்லாத கல் இல்ல. எனக்கும் மனசு உண்டு; அதில், ஆசாபாசம், பசி, தூக்கம், நல்லது, கெட்டது உண்டு. வீடு, வாசல்ன்னு வாழ ஆசைபடற சராசரி பொண்ணு தான்,'' என்றாள்.

♥''நீ ஆயிரம் நியாயம் பேசினாலும், என்னால சட்டப்படி உனக்கு உதவ முடியாது; நீ போகலாம்,'' என்றார், கறாராக!
''சார்... சட்டப்படி எங்கிட்ட, 'இன்கம்' சர்டிபிகேட் இல்லாம இருக்கலாம். ஆனா, தர்மப்படி எனக்கு உதவலாமில்லே...'' என்றாள், பாவமாக!

♥நக்கலாக சிரித்த சத்யன், ''தர்மப்படியா... நீயெல்லாம் வாழறது, எந்த வகை தர்மம்... ஆண்களோட பலவீனத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கிறது எல்லாம் ஒரு தொழிலா...'' என்றார்.
''ஏன் சார் ஒழுக்கமானவங்களுக்கு தான் லோன் தருவீங்களா... ஒழுக்கத்தின் அளவு கோல் எது... மனசா, உடம்பா?''

♥''இங்க பாரு... இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல; உனக்கு லோன் வேணும்ன்னா, வேற ஏதாவது சொத்து பத்திரம் இருந்தா கொண்டு வா,'' என்றார்.
''என் வீட்டோட சொத்து பத்திரம் உங்ககிட்ட தான் இருக்க போவுது... அப்பறம் எதுக்கு பத்திரம்...'' எனக் கேட்கவும், எரிச்சலான சத்யன், ''முதல்ல நீ கிளம்பு...'' என்றார்.

♥கண் கலங்கிய சுந்தரி, ''சார் நீங்க, எனக்கு, 'லோன்' தர வேணாம்; ஆனா, இதுவரைக்கும் நீங்க, 'லோன்' கொடுத்திருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் நேர்மையானவங்கன்னு யோசிச்சு பாருங்க,'' என்று சொல்லி எழுந்தவள், ஒரு பேப்பரில், தன் மொபைல் எண்ணை எழுதி கொடுத்து, ''மனசு மாறினா கூப்பிடுங்க சார்,'' என்று சொல்லி, வெளியேறினாள்.

♥அவள் கொடுத்த துண்டு பேப்பரை கசக்கி, குப்பை தொட்டியில் எறிந்தார்.
இரவு, சத்யனுக்கு தூக்கமே வரவில்லை. ஒழுக்கம் குறித்து, அவள் கேட்ட கேள்வி மனதில் அலையடித்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் மனைவியை இழந்த சத்யன், வாரிசும் இல்லாத நிலையில், தன் தாயுடன், வாழ்ந்து வருகிறார். சில சமயங்களில், ஹார்மோன் அவரை பாடாய் படுத்தும் போது, அதை, இறை சிந்தனையால், அடக்க பழகியிருந்தார். 

♥இந்நிலையில், நேற்று சுந்தரியை பார்த்து, 'சே... என்ன ஒரு அழகு...' என்று ஒரு நிமிடம் மனம் தடுமாற, பின், அவள் தொழில் அறிந்து, மனதை மாற்றிக் கொண்டார். கூடியவரை தன் வாழ்வில், நியாயம், தர்மம், நேர்மையை கடைப்பிடிப்பவர்.
நள்ளிரவு, 2:00 மணியை தாண்டியும் தூக்கம் வரவில்லை. எழுந்து, 'டிவி'யை, 'ஆன்' செய்தார். ஒரு சேனலில், பாலியல் தொழிலாளியுடனான பேட்டி ஒன்று ஒளிபரப்பாக, அதை கூர்ந்து கவனிந்தார்.
அந்தப் பெண், முகத்தை மறைத்து, தெலுங்கில் பேச, ஆங்கித்தில், 'சப் டைட்டில்' ஓடியது.

♥'பெண்மைங்கிறது, ஆண்டவன் கொடுத்த வரம்; யாராவது தவறா பார்த்தா கூட, அவர்களால் அதை தாங்க முடியாது. அப்படி இருக்கையில் இந்த தொழிலுக்கு சிலர் வர்றாங்கன்னா, அது, அவங்க, ஆசைப்பட்டா வருவாங்க... ஒரு மோசமான, எதிர்பாராத அனுபவம், உடல் ரீதியா ஏற்பட்டு, அப்புறம், வலுக்கட்டாயமா, இந்த தொழிலில் திணிக்கப்பட்டு, மீள முடியாத, புதைகுழியில் விழுந்து, வழி தெரியாம, இதையே ஏத்துக்கறோம்; இதூன் உண்மை.

♥'மத்தவங்க மாதிரி, வாழ நினைச்சாலும், யாரும், எங்கள மனுஷியாக கூட மதிக்கிறதில்ல; இன்பம் தர்ற, 'மிஷினா' தான் நினைக்கிறாங்க. திருடன், கொலைகாரனைக் கூட நம்புறாங்க... எங்கள மனுஷ ஜென்மாமாக் கூட மதிக்க மாட்டேங்கிறாங்க...' என்றாள், அந்த பெண்.
சத்யனுக்கு பொறி தட்டியது போல் இருந்தது. 

♥'கெட்டவங்களும், கெட்டுப் போனவங்களும் ஒண்ணா... எந்த பெண்ணால் தான், ஆசையாக, கண்ட கண்ட ஆண்களை தொட முடியும்... சுந்தரியை வெறுத்திருக்க கூடாதோ... சரி... அவள் மனதளவில் நல்லவளாகவே இருந்தாலும், வங்கியின் விதிமுறைகளை மீறி எப்படி உதவ முடியும்...

♥'பாவம்; வயதான காலத்தில், யார் அவளைப் பாத்துப்பாங்க. இவளால் ஒரு வீட்டில் போய் எல்லாப் பெண்களைப் போல் வாழ முடியுமா... அதுதான், வீடு வாங்க விரும்புகிறாளோ... அதிலும், உண்மையை கூறி உதவி கேட்டவளை, தீண்டத்தகாதவளாக கருதி விட்டோமோ...' என நினைத்தவர், 'அவளுக்கு எப்படி உதவலாம்...' என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.

♥மறுநாள், சீக்கிரம் அலுவலகம் சென்றவர், சுற்றும் முற்றும் பார்த்து, குப்பை தொட்டியை கிளறி, நேற்று, சுந்தரி எழுதித் தந்த மொபைல் போன் நம்பர் இருந்த பேப்பரை தேடி எடுத்தார்.
அடுத்த நாள், பேங்க் முடியும் நேரம், எதிரில் அமர்ந்திருந்த சுந்தரியிடம், ''நான், ஒரு யோசனை சொல்றேன்... உனக்கு தெரிஞ்சவங்க, யாராவது ரெண்டு பேர், ஜாமீன் கையெழுத்து போடணும்... அப்புறம், 'இன்கம்' சர்டிபிகேட்... கையில, 50 ஆயிரம் ரூபாய் வர்ற மாதிரி, ஒரு சர்டிபிகேட், 'ரெடி' செய்.''

♥''சரி சார்... 'வெரிபிகேஷன்' வருவாங்களா...''
''அத நான் பாத்துக்கறேன்... மாசம் இ.எம்.ஐ., 25,000 வரும். நீ கையில கிடக்கற பணத்த வெச்சு, 'லோன்' கிளியர் செய்துடலாம். இந்த உதவி, நான் தர்மப்படி, கொஞ்சம், 'ரிஸ்க்' எடுத்து தான் செய்றேன். அத புரிஞ்சுக்கணும். இ.எம்.ஐ.,யை ஒழுங்கா கட்டணும்,'' என்றார் சத்யன்.
'
♥'அதுல எந்த பிரச்னையும் இல்ல சார்... போன வாரத்துல, ரெண்டு நாள், நம்ப தொகுதி எம்.எல்.ஏ., கூட தான் இருந்தேன். அதோட, சில கம்பெனி கன்சல்டன்டும், எனக்கு கஸ்டமர் தான். உடனே, 'ரெடி' செய்துடறேன்,''என்று கூறி சந்தோஷத்துடன் சென்றாள், சுந்தரி.

♥ஒரே வாரத்தில், 'லோன்' தயாரானது. 'வெரிபிகேஷன்' இடத்தில், சத்யன் கையெழுத்திட்டது குறித்து, அசிஸ்டென்ட் மேனேஜர் கேட்டதற்கு, 'எனக்கு அவங்கள தெரியும்...' என்று முடித்தார்.
''சார்... உங்க உதவியால, எனக்கு இந்த வீடு கிடைச்சிருக்கு; அதுவும், கிழக்கு கடற்கரை சாலையில உங்களுக்கு, 'ட்ரீட்' கொடுக்க, ஆசைப்படுறேன்,'' என்று சுந்தரி சொன்ன போது, மறுத்து, ''முதல்ல நீ இந்த தொழில்ல இருந்து வெளியே வரப் பாரு,'' என்றார்.

♥தன் மீது அவருக்கிருந்த அன்பைக் கண்டு, நெகிழ்ந்து, சந்தோஷத்துடன் சென்றாள்.
லோன் விஷயம் முடிந்த பின், அவரிடம் போனில் பேச முயன்ற போது, அதற்கு தடை போட்டார். நான்கு மாதங்கள் கழித்து, ஒருநாள், சரிவர லோன் கட்டாத கஸ்டமர், 'லிஸ்ட்' சத்யன் பார்வைக்கு வந்தது; அதில், சுந்தரி பேர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

♥உடனே, மொபைல் போனில் அவளை அழைத்த போது, பதில் இல்லை. 'மெசேஜ்' அனுப்பியும் அன்று முழுவதும் பதில் இல்லை. சத்யனுக்கு, வேலை ஓடவில்லை; பாத்திரம் அறியாமல், பிச்சையிட்டு விட்டோமோ!

♥மறுநாள், சுந்தரியிடமிருந்து, 'ப்ளீஸ் வீட்டுக்கு வரவும்...' என்று, 'மெசேஜ்' வந்தது.
பேங்க் முடிந்து, அவள் வீட்டிற்கு சென்றார். கதவைத் திறந்த சுந்தரி, ''உள்ள வாங்க சார்...'' என்றாள். அவளைப் பார்த்த போது, உடல்நிலை சரியில்லாதவள் போல் காணப்பட்டாள்.

♥''சுந்தரி... உனக்காக ரொம்ப, 'ரிஸ்க்' எடுத்தேன். ரெண்டு மாசம், 'ட்யூ' கட்டாம இருக்கீயே...'' என்றார், படபடப்புடன்!
''தெரியும் சார்... இது தொழில் டல்லடிக்கிற காலம்; தவிர, எனக்கு தெரிஞ்சவங்க, 'டெத்'துக்கு உதவி செய்துட்டேன். இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லியிருக்கணும்; மன்னிச்சுக்கங்க. ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன்; அவர் கொடுத்ததும் கட்டிடுறேன்...'' என்றாள் பலகீனமான குரலில்!

♥அவள் பேச்சில், பொய் இல்லை என்பது புரிந்ததும். மனம் அமைதியடைந்தது. எலுமிச்சை ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த சுந்தரி, ''சார்... உங்களோட, 'பர்சனல்' லோன் கஸ்டமரா, என்னை, 'ட்ரீட்' செய்தீங்க; அத மறக்க மாட்டேன். இப்படி ஆரம்பத்திலேயே, 'ட்யூ' வரும்ன்னு எதிர்பார்க்கல. ஆனா, முதல் மாசமே, 'ட்யூ'க்கு மேல, 30 ஆயிரம் ரூபாய் கட்டியிருக்கேன்,'' என்றாள்.

♥''அது கணக்குல வராது. மாத தவணையில, தப்பு வரக் கூடாது,'' என்ற சத்யனின் கோபம், காணாமல் போயிருந்தது.
''டியூ எவ்வளவு கட்டணும்?'' என்று கேட்டார்.
''ஐம்பத்திரெண்டாயிரம் ரூபா சார்...'' என்றவள், ''கண்டிப்பா...'' என்று ஏதோ பேச முயன்ற போது, அதைக் கேட்காதவர் போல், ''உன், 'ட்யூ'வ நான் கட்டிடறேன்... அதுக்கு பதிலா...'' என்றவரை, கண்களில் குறும்பு பொங்க பார்த்தாள், சுந்தரி.

♥''எனக்கு ஒரு உதவி செய்யணும்... நான், மாலை நேரத்துல, ஒரு சர்வீசா, அஞ்சாவது வரைக்கும் படிக்கிற ஏழைப்பசங்களுக்கு, கணக்கு பாடம் டியூஷன் எடுக்கறேன்; இப்ப, ஆபீஸ் விஷயமா ஒரு மாசம், 'டூர்' போகணும்... அதனால, நீ என் வீட்ல தங்கி, பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கணும்,''என்றார்.

♥அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக இது இருந்ததால், சிறிது நேரம் யோசித்தாள்.
''என்ன... சொகுசு வாழ்க்கையில, இதெல்லாம் எதுக்குன்னு யோசிக்கிறயா?''
'
♥'இல்ல சார்... என்னோட கஸ்டமர்...'' என்று இழுத்த போது, ''எங்க போகப் போறாங்க... ஒரு மாசம் மட்டும் மொபைல் போன, 'ஆப்' செய்துட்டு, என் வீட்லயே தங்கிக்கலாம்,'' என்றதும், அரைகுறை மனதுடன், ''சரி சார்,'' என்றாள்.

♥ஒரு மாதம் கழித்து, சத்யன், வீடு திரும்பிய போது, அவர் காலில் விழுந்து, ''சார்... சாக்கடையில கிடந்த நான், அந்த நாத்தத்தக் கூட உணராம இருந்தேன்; உங்களால இப்ப, என்னை புனிதப்படுத்திக்கிட்டேன். என்னை, திரும்பவும் அந்த நரகத்துக்கு அனுப்பிடாதீங்க ப்ளீஸ்,'' கண்ணீரோடு கெஞ்சினாள், சுந்தரி.

♥தன் அம்மாவை பார்த்தார், சத்யன்.
''அவ பாட்டுக்கு இருக்கட்டுமே... எனக்கும், உதவியா தான் இருக்கா,'' என்றாள், அவரது அம்மா.
அமைதியாக வீட்டிற்குள் சென்றவர், சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து, ''சுந்தரி... மனிதன் எப்போதும், ஒரே மாதிரி இருக்க மாட்டான்; என் நேர்மைக்கு, சோதனை வரக் கூடாது; நீயும் பாதை மாறக் கூடாது. இந்தா... இதை, என் கையில கட்டு,'' என்று, ராக்கி கயிரை நீட்டினார், சத்யன்!


Post a Comment

0 Comments