HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண் ஆணை விட இருபது சதவீதம் எடைக்குறைவு. அவனைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல்.

♥பெண் ஆணை விட இருபது சதவீதம் எடைக்குறைவு. அவனைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். 

♥இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது.

♥புத்தகங்களை எப்போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை. அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம் (பிறப்புக்கு வழி பண்ண) பெரிசு.

♥அவள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள். 

♥ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா.. ? இத்தனை குறைபாடுகள் அவளுக்குள் இருப்பதால்தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.

♥இவ்வளவு கஷ்டத்துடன்தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு பின்னி பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காது போது உணர்ச்சி வயப்படுகிறாள். இதே மாதிரி கணவனும் சில வேண்டுதல் மனைவியிடம் கேட்காமலேயே எதிர்ப்பார்க்கிறான்.

♥மேலும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை மூன்று - மூன்று மாதங்களாக (ட்ரை மெஸ்டர்களாக) பிரித்துச் சொல்வது வழக்கம். ஒவ்வொரு ட்ரை மெஸ்டரிலும் அவள் உடலிலும் உள்ளத்திலம் வௌ;வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல் ஏற்படுவதற்கு முன் ஒரு பெண்ணுக்குச் சில சமயங்களில் உணர்ச்சி பூர்வமான மாறுதல்கள் தோன்றலாம். சிலருக்கு வாயில் ஒரு மாதிரியான 'மெட்டாலிக் டேஸ்ட"; ஏற்படும் திடீரென்று காபி பிடிக்காமல் போகும்.

♥ஒரு மாதிரி மந்தமாக இருக்கும். கோபம் வரும். கண்ணீர் வரும் அசதி, டிப்ரெஷன் பரபரப்பு என்னதான் கர்ப்பமான செய்தியைப் பற்றி சந்தோஷமிருந்தாலும் இம்மாதிரி தவிர்க்க முடியாத மாறுதல்கள் அவளில் தோன்றுகின்றன. கர்ப்பமான காலத்தில் நல்ல பிடித்துப் போன கணவனைக் கூட சிலசமயம் நோக வேண்டிய நிலை அவளுக்கு வருகிறது. இதைப்போல் காரமாக, புளிப்பாக எதையாவது சுவைக்க வேண்டுமென்ற ஆசை. இதெல்லாம் தான் மசக்கை.

♥வாந்தி எடுக்கிற சமாசாரம் வேறு. சுமார் 60 சதவீதம் பேருக்கு இந்த உபாதை. இதன் காரணம் விஞ்ஞானத்திற்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று அவள் ரத்தத்தில் ஹார்மோன் அளவு அதிகமாகிவிடுவதால் ஒரு மாதரியான 'ரியாக்ஷன்' என்கிறார்கள்.

♥பொதுவாக முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த உபாதைகள் எல்லாம் நின்று போய்விடுகின்றன.

♥இதெல்லாம் பெண்கள் பிரச்சினை இவ்வளவு கஷ்டத்துடன்தான் வாழ்க்கை அவளுக்கு இருக்கிறது... ஆண்கள் சற்று யோசியுங்கள்.


Post a Comment

0 Comments