♥வார்த்தைகளின் முக்கியத்துவம்...!!
♥மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்துவிட்டு நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றார்..
♥பெண்மணி : எவ்வளவு காலம் டாக்டர்... நான் சாகும் வரை இந்த மாத்திரையை சாப்பிடணுமா?
♥டாக்டர் : நீங்கள் வாழும் வரை...
♥சாகும் வரை... வாழும் வரை... என்ற இரு வாக்கியங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால், சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால், வாழும் வரை என்பதில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.
♥சொற்களில் என்ன இருக்கிறது? அதை புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது. என்று வாதாடலாம்... ஆனால்,
♥சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...
♥அடுத்தவரை ஊக்குவிக்கும் வார்த்தைகளை மட்டும் பேசலாம்.
♥அடுத்தவரை சோர்ந்து போகச் செய்யும் வார்த்தைகளை தவிர்க்கலாம்...
0 Comments
Thank you