HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கீரைகள்...

#கீரைகள்... 
♥அன்று நூறு வயதை தாண்டியும் ஊள்றுகோல், கண் கண்ணாடி, காது கருவி, தலைக்கு கருப்புசாயம், தேடாத முன்னோர்கள் பலர். இன்றைய சர்க்கரை, பல் சொத்தை, ஆண்மை குறைவில்லாத நிலை, மூட்டுவலி இன்னும் விதவிதமான வியாதிகள் இல்லாமல் உடலை வளர்த்தார்களே அவர்கள் எப்படி???

♥காரணம், நம்மை சுற்றியே அன்றும் இன்றும் என்றும் ஆரோக்கியம் தந்த அற்புதமாக தானாக வளரும் கீரைகளே. நாம் தான் அதை இன்று உள்ள சோம்பேறித்தனத்தால் தேடுவதில்லை.  
பொதுவாக கீரைகள் என்று தனியாக பூமியில் முளைப்பதில்லை. நம்மைச்சுற்றியுள்ள தமிழ் நிலத்திலுள்ள மூலிகைகள் பலவற்றையும் கீரைகளாக காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் நமது முன்னோர்கள். நஞ்சுத்தன்மை இல்லாத சுவைதரக்கூடிய அனைத்துமே கீரைகள்தான். மேலும் அவற்றில் சுவை, மணம் சேர்ப்பதும், பருவநிலைக்கு தகுந்தாற்போல அவற்றை உபயோகிப்பதும் நமது திறமையே.
கீரைகளில் சில.....

♥1. பொன்னாங்கண்ணி கீரை
2. ஆரைக் கீரை
3. குறிஞ்சாக் கீரை 
4. தாளி கீரை என்ற நறுந்தாளி கீரை 
5. முசுட்டை கீரை
6. குமுட்டி கீரை
7. மின்னக்கீரை என்ற முன்னை கீரை
8. முருங்கை கீரை
9. புண்ணாக்கு கீரை என்ற புண்ணாத்தி கீரை

♥10. மூக்கிரட்டை கீரை
11. குப்பை கீரை
12. கோவ கீரை என்ற கொவ்வை  கீரை
13.பருப்பு கீரை
13.மணலி கீரை
14.பொடுதலை கீரை
15. அப்பக்கோவை கீரை
16. வல்லாரை கீரை 
17. தண்டு கீரை சிறுபருவத்தில் முளைக்கீரை
18. கரிசலாங்கண்ணி கீரை
19. லஜ்ஜைகெட்ட கீரை என்ற சண்டி கீரை 

♥20. மகிலி கீரை
21. தொய்யக்கீரை என்ற துயிலி கீரை  
22. பசலைக்கீரை
23. தூதுளம்கீரை
24. துத்திக்கீரை
25. நாயுருவிக்கீரை
26. முடக்கத்தான் கீரை
27. பிரண்டை கீரை
28. கானாவாழை கீரை
29. அகத்தி கீரை

♥30. அம்மான்பச்சரிசி கீரை
31. கிணற்றுபச்சை கீரை
32. காட்டுக்கடுகு கீரை
33. புளிச்சக்கீரை 
34. காசினி கீரை
35. தவசிமுருங்கை கீரை 
36. வெந்தயக்கீரை
37. சாணக்கீரை
38. சூரி கீரை என்ற நத்தைசூரி கீரை
39. வேளைக்கீரை என்ற நல்லவேளை கீரை

♥40. முள்முருங்கை கீரை
41. சக்ரவர்த்தி கீரை
42. பரட்டை கீரை
43. பொடுதலை கீரை
44. மணித்தக்காளி கீரை
45. பால்பெருக்கி கீரை
46. வேலிப்பருத்தி கீரை
47. கொத்துமல்லி கீரை
48. கருவேப்பிலை கீரை
49. புளியங்கீரை
50. காட்டுத்தக்காளிகீரை

♥இவற்றில் கிடைக்கும் கீரைகளை அனைத்தையும் கலந்து போட்டு சமையல் செய்தால் அது கலவைக்கீரை. இன்னும் எத்தனையோ.... இவையெல்லாம் தானாக வேலி, வயல், காடு, மரம் போன்ற இடங்களில் வளர்ந்து வீனாகப்போகிறது. இந்த கீரைகளை யாரும் ரசாயன உரம் போட்டு வளர்பதில்லை, மண்ணில் உள்ள இயற்கை சத்துக்களின் மூலம் தானாகவே வளர்கிறது இக்கீரைகளை கூட்டு, பொரியல், துவட்டல், கடைசல், துவையல், சட்னி ரசம், சூப் ,சாம்பார்,குருமா, என ஒவ்வோறு கீரையையும் அதன் குணத்தை பொருத்து சமைத்து சாப்பிட நல்ல சுவையாகவும், உடலுக்கு உரம் ஏற்றும் உணவாகவும் இருக்கும்

♥ நண்பர்களே...எல்லா இடத்திலும் வளரக்கூடிய நம் நாட்டில் வாழும் நம் உணவுகளே, இதையே நம் முன்னோர்கள் தினம் ஒரு கீரையாக சாப்பிட்டு நோய்கள் இன்றி வாழ்ந்தார்கள், நாமும் பார்த்த இடத்தில் பறித்து சமைத்து சாப்பிடலாமே நண்பர்களே...

Post a Comment

0 Comments