அலுவலகத்தில் இருக்கும் கணவனுக்கு மெஸேஜ் அனுப்பினார் அவர் மனைவி
மனைவி : என்னங்க , வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்)
கணவன் : யாரு சுகன்யா , எனக்கு ஹாய் சொல்ல சொல்றது..
மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்...
இதுக்கு மேல தான் ட்விஸ்ட்டே...
கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன் , நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல , அதான் கேட்டேன்...
மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க???
கணவன் : காய் கறி கடையில...
மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்...
கணவன் : சரி சீக்கிரம் வா...
10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க...
மனைவி : எங்க இருக்கீங்க??
கணவன் : நீ எங்க இருக்க??
மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல...
கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு வந்துட்டல்ல , அப்டியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு போயிடு... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாப்ல...
0 Comments
Thank you