வேண்டாம் என்று விட்டெறிந்து விலகிப்போனவர்கள் #பறவையை போன்றவர்கள்.
#உண்மையான அன்பை மறக்க முடியாமல் நெஞ்சோடு வைத்திருப்பவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள்.
அவர்களிடம் இறக்கை இருந்தது பறந்து விட்டார்கள்.
உங்களிடம் வேர்கள் இருக்கிறது அதனால் கொஞ்சம் கூட நகர முடியாமல் தவிக்கிறார்கள்.
பறவை எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் இளைப்பாறுவதற்கு கீழே தான் வந்தாக வேண்டும்.
ஏமாந்து விட்டோம் என்ற கவலையில் இருப்பதால் இன்னொரு பறவை உங்களோடு கூடுகட்டி வாழ்வதற்கு அனுமதிக்க தவறி விடாதீர்கள்.
இறக்கை இருப்பதால் எல்லா பறவைகளும் பறந்து போய் விடாது.
அது இருப்பதால்தான் சிலதாவது உங்களைத் தேடி வருகின்றது.
நீங்கள் காய்ந்து உடைந்து சருகாகி விழும் வரை
உங்களோடு சேர்ந்து வாழக்கூடிய ஒரு குருவியை தேடுங்கள்.
ஆனால் எதற்கும் இடம் கொடுக்காமல் கடைசிவரை தனி மரமாகவே சாய்ந்து விடாதீர்கள்.
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
உங்களை விலகிப் போன பறவைகள் உங்களை பிரிந்து வாழ்கிறார்கள் என்று மட்டுமே நினைக்காதீர்கள்.
இன்னொரு மரத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு தான் உங்களை பிரிந்தார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
0 Comments
Thank you