ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன் ,
அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை ,
தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன் ,
தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு,
எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா ,
உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும்,
பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா ,
சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி ,
நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா .
இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள் இருக்கின்றன...
சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம் மாத்திரமே ...
பணம் மாத்திரம் அல்ல ....!
0 Comments
Thank you