♥தண்டனை!
♥ காமம் அவளின்
கண்ணை மறைத்தது
கருவறையில் நான் நுழைந்தேன்!
♥காமம் தொலைந்து
அவளின் கண் திறந்தது
நான் வளர்ந்து விட்டேன்!
♥காதல் கசந்தது
கல்யாணம் கனவாய் போனது!
♥அவமானத்தின் சின்னமென்று
அவமதிக்கப்பட்டேன்...
அவளின் உறவினரால்!
♥ எங்கோ ஒரு ஊரில்
என்னை பிரசவித்தாள் அவள்!
♥என் முகம் பார்த்த அவளோ
என்னில் அவனைக் கண்டாள்!
♥குப்பைத் தொட்டியில்
வீசப்பட்டேன்...
அவளின் காதலைப் போலவே!
♥ அவனும், அவளும்
செய்த தவறுக்கு
தண்டனை எனக்கு
குப்பைத் தொட்டி!
♥ப.லட்சுமி, கோட்டூர்
0 Comments
Thank you