#அன்றும்_இன்றும்
♥டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
♥கார் என் வீட்டிற்கு வந்தபோது.....
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
♥என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.
♥என் வீட்டிற்கு கணினி வந்தபோது.......
எழுதவதை விட்டுவிட்டேன்.
♥ஏசி வந்ததும்...... உடல் வியர்க்காமல் வியாதிகள் தான் வந்தது....
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.
♥நகரத்திற்கு வந்தவுடன்...
அழகும் ஆரோக்கியமும் நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.
♥வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.
♥வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...
பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.
♥துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.
♥சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.
♥கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....
எப்படி தூங்குவது என்பதையே.....
மறந்துவிட்டேன்.
0 Comments
Thank you