♥ஒருமுறை கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, மனைவியை அவள் தாயார் வீட்டுக்கு விரட்டி விட்டான்.
♥ஆனால், கணவனால் மனைவியைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அவளை மீண்டும் அழைத்துவர நினைத்து மனைவிக்கு போன் செய்தான்.
♥கணவன் : நீ இல்லாமல் என்னால் வாழவே முடியவில்லை.. வீட்டிற்கு வா... நாம் சேர்ந்து வாழலாம்...
♥மனைவி : ஒரு டீ கப்பை எடுத்து தரையில் வீசுங்க... என்றாள்..
♥கணவன் : வீசிட்டேன்...
♥மனைவி : இப்பொழுது கீழே உடைந்து கிடக்கும் அந்த உடைந்த கப்பை, உங்களால் மீண்டும் ஒட்ட வைக்க முடியுமா? அப்படித்தான் என் மனமும். ஒருமுறை உடைந்தால் மீண்டும் ஒட்டாது.
♥கணவன் : நான் வீசுனது பிளாஸ்டிக் கப்... அது உடையவே இல்லையே...
♥மனைவி : சரி... ஈவினிங் வந்து கூட்டிக்கிட்டு போங்க...
♥கணவன் : எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக்கூடாது...😆😆
<><><><><><><><><><><><><><>
<><><><><><><><><><><><><><>
♥எதையும் சிந்திக்காமல் வாழ வேண்டும் என்று சிலர்...
♥எதற்கு வாழ வேண்டும்? என்று சிலர்..
♥எப்படி வாழ வேண்டும்? என்று சிலர்...
♥எப்படியாவது வாழ்ந்திட வேண்டும் என்று சிலர்...
என நான்கு வகைகளாக மனிதர்கள் உள்ளனர்...
0 Comments
Thank you