HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மருத்துவமும் பெண் திருமணமும் !!!

~மருத்துவமும் பெண் திருமணமும் !!!

இதை படிக்கிற உங்களையே எடுத்துக்கோங்களேன்!

உங்க அண்ணனுக்கோ,மாமாவுக்கு இல்ல உங்களுக்கோ வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்னாடி என் அம்மா கூட வேலை செய்ற கலீக் போன் பண்ணி இருந்தாங்க...அவங்க ரொம்பவே நெருக்கம் எங்க குடும்பத்துக்கு.

நான் அப்போ தூங்கிட்டு இருந்தேன் போல!அரவிந்த் கிட்ட ரொம்ப அவசரமா பேசனும்மா...அவனை எப்டியாச்சு எழுப்புன்னு சொல்லிருக்காங்க.என் அப்பாவோ,அம்மாவோ நான் தூங்குறப்ப என் ரூம் கதவை தட்டவே மாட்டாங்க.அம்மா தட்டவே என்னடா இது'ன்னு நான் எழுந்து போனேன்...

அம்மா இது மாதிரி ஆண்ட்டி உன்கிட்ட பேசணுமாம் டா...ஏதோ முக்கியமான விஷயமாம்...இந்தா பேசுன்னு குடுத்தாங்க.

ஹான்..சொல்லுங்க ஆண்டி....

(அரவிந்..நல்லா இருக்கியா மா ?? தூக்கத்துல எழுப்பிட்டனோ?

இல்ல இல்ல ஆண்ட்டி.இப்போ தான் தூங்க ஆரம்பிச்சேன்.சொல்லுங்க ஆண்டி !!

இல்ல கண்ணா!அண்ணனுக்கு நாளைக்கு பொண்ணு பாக்க போறோம்.ரொம்ப நாளா அமையாம இருந்துச்சு ல...நாளைக்கு தான் நல்ல வரன் ஒன்னு பாக்க போறோம்...

சூப்பர் ஆண்ட்டி.அடியேன் என்ன செய்யணும்?

நீ வேற டா...திடீர் ன்னு எங்க தூரத்து சொந்தம் ஒருத்தர் போன் பண்ணி அந்த பொண்ணுக்கு உடம்புல கால்சியம்(Calcium) கம்மியா இருக்குன்னு 3 மாசமா மாத்திரை சாப்பிடுறங்களாம்.அத மறைச்சு நம்மல ஏமாத்திட்டங்களாம் னு சொல்லுறாங்க டா...என்ன பண்ணுறதுனே தெரியல...மீதி ரத்தம் டெஸ்ட் எல்லாம் நார்மலாம்...ஆனா கால்சியம் கம்மின்னு எடுக்குதாம் டா அந்த பொண்ணு.)
.
.
.
இத இங்க இப்டியே நிறுத்திப்போம்... அவங்க கிட்ட நான் பேசுனது பத்தி இங்க இப்போ விஷயம் இல்லை!

அதாவது,நாம இருக்கோம் ல...அதாவது இப்போ 18-32 ல இருக்க தலைமுறை...நம்ம கிட்ட முக்கியமா மாற வேண்டிய விஷயம் இது...அதுக்காக தான் இந்த பதிவு...

நாம எல்லாரும் கற்பழிப்பு,ஈவ் டீஸிங்,மாதவிடாய் கஷ்டம் பத்தி நிறைய கட்டுரை எழுதுறோம், பேசுறோமே தவிர....ஒரு பெண்ணுக்கு அடிப்படையா அவளோட வீட்டுல பட்டு சேலை கட்டிக்கிட்டு பெண் பார்க்கும் படலம் நடக்குறப்பவே இந்த மாதிரி நிராகரிப்பும் வீண் பழியும் ஏற்படுது.

இன்னொரு முக்கியமான விஷயம் 'தைராய்டு'

தைராய்டு சுரப்பி ல பிரச்சனை இருந்தா கொழந்த பொறக்கவே பிறக்காது...தாம்பத்திய வாழ்க்கை ரொம்ப பாதிக்கும் னு யாரோ எப்பவோ கிளப்பி விட்டது தான் இங்க இப்டி வந்து நிக்குது....

நான் பார்த்த எல்லா தைராய்டு பெண்மணியும் உரிய சிகிச்சை மூலமா சத்தமே இல்லாம கொழந்த பெத்து தாயும் சேயும் ரொம்ப ஆரோக்கியமா இருக்காங்க....தைராய்டு ல மாதவிடாய் பிரச்சனைகள் சில சமயம் உண்டு(அதுவும் Reversible னு சொல்ல கூடிய temporary பிரச்சனைகள் தான்)

நம்ம ஆண்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உடல் உபாதை உண்டு...அதை நாம கண்டறிஞ்சு சரி பண்ணிக்கிறோம்...

ஆனா ஒரு பெண்ணுக்கு அப்படி இல்லை....ஏதோ ஒரு சின்ன உடல் சார்ந்த மாற்றங்கள் னு வெச்சுக்கோங்களேன்...அவ்ளோதான்...நிராகரிப்பு,உடல் சார்ந்த கேலி கிண்டல்,திருமணம் தடைப்படுதல்..இந்த சமுதாயம் குடுக்கிற peer pressure.....இதனால பெண்களுக்கு மன அழுத்தம்!

எத்தனை பேரு வெளிய கிளம்பரப்ப கணவன் இல்லாத ஒரு பெண் ரோட்ல வர்றப்ப....கொஞ்ச நேரம் உள்ள வந்து தண்ணி குடிச்சிட்டு போ-ன்னு அம்மாவோ பாட்டியோ சொல்லி கேட்டு இருக்கீங்க...

கள்ள சாராயம் குடிச்சு 30 வயசுல புருஷன் செத்துட்டா 25 வயசுல இருந்து 85 வயசுல சாகுற வரைக்கும் அந்த பெண்மணி அனுபவிக்குற கொடுமை லாம் எவ்ளோ தெரியுமா?

தயவு செஞ்சு உங்களுக்கு நான் 2 முக்கியமான விஷயம் சொல்லிக்கிறேன்...

1.ஏதோ ஒரு பெண்ணுக்கு உடல் உபாதை இருக்குன்னு தெரிஞ்சா,நீங்க பொண்ணு பாக்க போறீங்க ன்னா... அவங்க கிட்டயே அதை பத்தி என்னன்னு கேளுங்க.அதை பத்தி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க...எதுவுமே தெரியாம அந்த பொண்ணு எதுக்கோ மாத்திரை சாப்டுதாம் பா....அது நம்ம குடும்பத்துக்கு  வேணாம்னு சொல்லுறது லாம்....நீங்க மனுஷனே இல்லன்றத காமிக்கும்...நீங்க வெளில வந்து அதை நாலு பேர் கிட்ட சொல்லுவிங்க...அது எப்டி எப்படியோ பரவி நிக்கும்...உங்களுக்கு அது சாதாரண ஒரு செய்தி....அதால பெண்களுக்கு மன அழுத்தம் எவ்ளோ வருது...கல்யாணம் ஆகலனா குடும்பம் அவங்கள எப்டிலாம் பேசுதுனு லாம் யோசிக்கிறதே இல்ல நாம !!

2.உடல் உபாதை இல்லாம யாருமே இல்லை.நாம சந்திக்கிற பலர் ஒரு விதத்தில  ஏதோ ஒரு பிரச்சனை ல இருக்கலாம்...சிலருக்கு மனுசுல...சிலருக்கு உடம்புல...தயவு செஞ்சு அதை புரிஞ்சு அவங்கள ஏத்துக்கோங்க...உங்கள யாருக்கும் வாழ்க்கை தர சொல்லல...அது உங்களால முடியவும் முடியாது...என் வாழ்க்கை என் கையில மட்டும் தான்...என் சந்தோசம் மத்தவங்க கிட்ட இல்ல அப்டின்ட்றத ரொம்ப தீர்க்கமா நம்புரவன் நான்...அவங்கள ஒரு சக மனுஷியா நடத்துங்க...அவங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருந்தா,அவங்கள நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய்ட்டு,சரியான மருத்துவ உதவி செஞ்சு,கூட சேர்ந்து தாண்டி போறது தானே காதல்....வாழ்க்கைல நம்பிக்கையை குடுங்க...உங்க செயல் அவங்களுக்கு மனசலவுல நம்பிக்கையை விதைக்கும்...அதுவே பாதி மருந்து.

3.இங்க 50 களை தாண்டுன பலரோட பேச்ச கேக்காதிங்க...பலருக்கு இங்க ஒண்ணும் தெரியாது....அவ்ளோ ஈஸியா அடுத்தவன குறை சொல்லிட்டு போய்டுற ஆளுங்க...நீங்களே அனலிஸ் பண்ணுங்க...அப்பா சொல்லிட்டாரு...அம்மா சொல்லிட்டாங்க...தூரத்து சொந்தம் சொல்லிட்டான்...அதனால இது சரி வராதுன்னு இருக்காதீங்க...படிச்ச தலைமுறை நாம....நம்ம படிச்ச கல்வியோட நோக்கமே நம்ம நல்லா சிந்திக்கணும் னு தான்....இங்க கூட அதை பயன்படுத்தலனா அப்புறம் எப்டி?

4.இங்க ஏதோ ஒரு விஷயத்துக்காக போராடுற பெண்களுக்கு...

உங்களோட மாதவிடாய் பிரச்சனை,PCOD,தைராய்டு இது எல்லாமே 100% குணப்படுத்த கூடிய பிரச்சனை....இதை நெனச்சு ரொம்ப கஷ்டப்படாதீங்க...மனச வருத்தீக்காதிங்க...நல்ல மருத்துவரை பாருங்க...எல்லாம் சரி ஆயிடும்...உங்களுக்கும் அதே சொல்லிக்கிறேன்...வீட்டுல நல்ல வரன் னு சொன்னங்கன்னு அப்டியே போய்ட்டு கல்யாணம் பண்ணிக்காதிங்க...Long term க்கு யோசிங்க.

வாழ்க்கையை அழகாக்குற இப்படியான ஒரு துணையை தேர்ந்தெடுங்க !!

ஏன் னா !! 45 வயசுக்கு மேல இதை படிச்சிட்டு இருக்க நீங்களும்,இதை எழுதின நானும் கால்சியம் மாத்திரை தான் எடுக்கணும்...அதான் கள யதார்த்தம்....அதான் வாழ்க்கை...

மாற்றம் ஒன்றே மாறாதது !!
Thanks to
Dr.Aravindha Raj

#BETTER_HEALTH_FOR_BETTER_LIFE

Post a Comment

0 Comments