HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஆயிரம் முத்தங்களுடன் உங்களின் அன்பு மகள்...


வீடு முழுவதும் தோரணங்கள்,
கல்யாண அலங்காரங்கள்,
வீட்டில் முதல் திருமணம்!
மகளின் திருமணம்!
திருமணமாகி இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது!
என்னைத்தவிர எல்லோருக்கும் சந்தோஷம்!
எப்படி பிரிந்து இருக்கப்போகிறேன்
என்பது தான் என் கஷ்டமும் கவலையும்!
இவ்வளவு பெரிய வீட்டை கட்ட
முதல் செங்கல் எடுத்து கொடுத்தது அவள்தான்!

அவள் பிஞ்சு கைகளை
செங்கல் சிராய்த்து விடும் என்று
கைமுழுவதும் துணியால் சுற்றி
எடுத்து கொடுக்க சொன்னேன்!
இன்று அவளை அனுப்புவதற்காக
வாங்கிய விலையுயர்ந்த காரும்
ரோஜாக்களால் சுற்றப்பட்டு இருக்கிறது!
விடிய விடிய நானே தான் விரும்பி
சுற்றி அலங்கரித்தேன்!
இப்போது வழியனுப்ப முடியாமல்
ரூமுக்குள் அடைந்து உட்கார்ந்து இருக்கிறேன்!

இதழ்களும் இமைகளும் மட்டுமே
வெடிக்கும் அழுகைக்கு வேலி போட்டு
காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன!
கிளம்ப தயாராகி விட்டார்கள்,
யாரும் என்னை கூப்பிட வேண்டாம் என்று
சொல்லிவிட்டேன்!
எல்லோருக்கும் என்னை புரியும்,
அதனால் கட்டாய படுத்தமாட்டார்கள்!
கிளம்புவதற்கு முன் என் குழந்தை வந்தது!
அவள் குழந்தையாக இருக்கும்போது
அம்மா திட்டிவிட்டாள் என்று
இதேபோல் தான் வந்து ரூமுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்வாள் நான் வரும்வரை!

பார்த்த உடன் அவ்வளவு துக்கம்
எங்கிருந்து வருமோ தெரியாது,
அப்படி பொங்கிக்கொண்டு வரும் அழுகை!
காரணம் பெரிதாக இருக்காது,
இவள் சாக்லேட் கேட்டிருப்பாள்,
அவள் கொடுத்திருக்க மாட்டாள் அவ்வளவுதான்!
அதற்கு அவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!
அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத
ஆர்ப்பாட்டமாக தெரியும் என்னுடைய
இந்த ஆர்பாட்டமும்!
ஆனால் எனக்கு அப்படியில்லை,
நிஜமாகவே அவளை பிரிந்து இருக்கமுடியாது
என்பதால் இந்த தவிப்பு!
இதே கஷ்டம் அவளுக்கும் இருக்கும்,
ஆனால் காட்டிக்கொள்ளாமல்
என்னை சமாதான படுத்துகிறாள்!
"வெறும் பன்னெண்டு கிலோமீட்டர் தானேப்பா,
எப்போ வேணா ஓடி வந்துடுவேன்,
உங்களுக்கு கூட ஆபீஸ் போற வழிதானே,
எப்போ வேணா வந்து பாத்துட்டு போலாம்,
feel பண்ணாதீங்கப்பா,
அப்புறம் நான் அழ ஆரம்பிச்சேன்னா
எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கே தெரியும்,
வந்து tata சொல்லுங்க என்று
கையை பிடித்து அழைக்க,
எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து நடந்தேன்!
எனக்காக எல்லோரும் காத்திருப்பது
என்னவோ போலிருந்தது!

காரில் ஏறினாள்,
எல்லோரும் என்னையே பார்த்தார்கள்,
கார் கிளம்பி தெருவை கடக்கும் வரை
கையசைத்து கொண்டே இருந்தோம்,
எல்லோரும் எங்களையே
பார்த்துக்கொண்டு இருந்தார்கள்!
என் மனைவி, மகனுக்கும் கூட
இந்த பிரிவு கஷ்டம் தான்!
ஆனால் அவர்கள் புரிந்து ஏற்றுக்கொண்டார்கள்!
எல்லோரும் யாரோடும் பேசாமல்
ஹாலில் அமைதியாய் உட்கார்ந்து விட்டார்கள்!
நான் மட்டும் படியேறி அவளுக்கென்று
வடிவமைத்த அறைக்குள் நுழைந்தேன்!
அறை முழுவதும் அவளுக்காக
வாங்கி கொடுத்த பொம்மைகள்!
அவள் துப்பட்டாக்களை எடுத்து
போர்த்திக்கொண்டு அழவேண்டும் போல்
தோன்றியது,
கப்போர்டை திறந்தேன்,
உள்ளே ஒரு கடிதம்!
------------
"அப்பா,
என்னை வழியனுப்பியதும்
இங்குதான் வருவீர்கள் என்று தெரியும்,
என் துப்பட்டாவை தேடுவீர்கள் என்றும் தெரியும்!

கொஞ்ச நாள் என்னுடைய அறையில் தான்
தூங்குவீர்கள் என்று தெரியும்,
உங்களுடைய மாத்திரைகள்,
டைரி, புத்தகங்கள் எல்லாவற்றையும்
என்னுடைய அறையிலேயே வைத்துவிட்டேன்!
நல்ல பிள்ளையா சமத்தாக தூங்கனும்,
அம்மா அப்போ அப்போ ஓடி வந்துடுவேன்,
என்னை நினைச்சி கவலைப்பட கூடாது,
இவர் நீங்க பாத்த மாப்பிள்ளை,
கண்டிப்பா ரொம்ப நல்லா பாத்துக்குவாரு,
என் பிரண்ட்ஸ் எல்லாரும் love marriage,
நான் மட்டும் உங்க choice க்கு விட்டுட்டேன்!
உங்கள விட என் life ல யாருக்குப்பா
அக்கறை இருக்க முடியும்!
அதுனால கண்டிப்பா சந்தோஷமா தான்
இருப்பேன்!
உலகின் சிறந்த தந்தையா எல்லாத்தையும்
எனக்கு கொடுத்துட்டீங்க,
ஒரு பெஸ்ட் மகளா எப்பவுமே
உங்க பேரை காப்பாத்துவேன்!
எனக்கு வந்த எல்லா proposal greetings ம்
மூணாவது கப்போர்ட்ல இருக்கு,
போரடிக்கும்போது படிங்க!
Engagement க்கு அப்புறம் கூட
நாலு பேரு propose பண்ணாங்க,
எங்க அப்பாவை பாத்து பேசுங்கன்னு
சொல்லிட்டேன்,
வந்து பாத்தா நல்ல பதிலா
சொல்லி அனுப்புங்கப்பா
😉 😉
அப்புறம் இன்னொரு விஷயம்,
உங்களோட light orange shirt,
மருதாணி பூசுன white shirt,
எனக்கு புடிச்ச Sky blue shirt,
அப்புறம் Extra வா மூணு shirt
இதெல்லாம் காணோம்னு தேடாதீங்க,
எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன்,
எனக்கு மட்டும் தேடாதா என்ன?
Love you more than
anything in this world அப்பா😘😘😘 "
இப்படிக்கு
ஆயிரம் முத்தங்களுடன் உங்களின் அன்பு மகள்...

Post a Comment

0 Comments