மனைவி' என்ற தகுதியோடு
தன் வாழ்க்கைக் குள்
நுழையும் ஒரு பெண்ணை
ஒரு ஆண் எப்படி ஏற்கிறான்?
தங்கள் வாழ்க்கை முழுமை பெற்றதே
மனைவியால்தான் என்பதை சிலர்
உணர்கிறார்கள். கணவனும் மனைவியும்
இருவரில்லை , ஒருவர்தான் என்ற
உண்மை புரிந்தவர்கள் இங்கேயே
சொர்க்கத்தைக் கொண்டு வருகிறார்கள்.
இந்தப் பக்கம் இவர்களுக்கானது
இல் லை. 'சுடு சொற்களாலும்
வன்முறையாலும் அடிமைப்படுத்தி
வைக்க வேண்டியவள்தான் மனைவி
என நினைக்கிறவர்கள் நிறைய பேர்.
தங்கள் அடையாளத்தை இழந்து,
உறவுகளிடமிருந்து துண்டிக்கப்பட்ட
தீவாக வந்து சேரும் ஒரு பெண்ணின்
'உணர்வுகள் இவர்களுக்கு
புரிவதில்லை ?
👩🏻உங்களுக்கு இருப்பதைப் போலவே அவளுக்கும் வண்ணமயமான
கனவுகளும், வாழ்க்கை குறித்த வளமான கற்பனைகளும் நிறைய
உண்டு. ஏனெனில், உங்களைப் போலவே அவளும் ஒரு மானிடப் பிறவியே!
👩🏻வாழ்க்கையில் ஒருமுறைகூட சமையலறைக்குள் எட்டிப்
பார்க்காமல் நீங்கள் எப்படி உங்கள் வீட்டில் வளர்ந்தீர்களோ.
உங்கள் சகோதரி எப்படி வளர்ந்தாளோ, அப்படித்தான்
அவளும் அவளது வீட்டில் வளர்ந்திருப்பாள். ஏனெனில்
அவளும் உங்களைப் போலவே பள்ளியிலும் கல்லூரியிலும்
மதிப்பெண்களின் பின்னால் மாய ஓட்டம் நிகழ்த்த வேண்டியிருந்தது.
அம்மாவுக்கு உதவ சமையல் செய்யும் பெண் பிள்ளைகளுக்கு
நமது கல்விமுறை எந்த சலுகையும் அளிப்பதில்லையே!
👩🏻உங்களைப் போலவே வாழ்ந்த ஒருத்தியை, புதிய சூழலில் தன்னைப்
பொருத்திக்கொள்ள முயற்சிக்கும் முதல் நாளிலேயே ஒரு தேர்ந்த
சமையல்கலை நிபுணர் போல சமைத்துத் தரச் சொல்லிக் கேட்பது
சரியல்ல!
👩🏻ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக, குழந்தைகளுக்கு
ஒரு டீச்சராக, ஒரு வேலைக்காரியாக, ஒரு
சமையல்காரியாக... பல அவதாரங்களை எடுத்துச்
செய்கிற பணிகளுக்கு இடையிலும் உங்கள் ,
தேவைகளைப் புரிந்துகொண்டு அவள் செய்கிற
சேவைகளில் நீங்கள் குறைகள் கண்டுபிடிக்கலாமா?
👩🏻அவளும் உங்களைப்
போலவே இந்த 20, 25
வயது வரை
அம்மாவையும்
அப்பாவையும் சகோதரனையும்
சகோதரியையும் நேசித்து,
அன்பைப் பொழிந்து, அன்பு
மழையில் நனைந்தே
வாழ்ந்திருப்பாள். அவள் நேசித்த
வீட்டை யு ம், ஊ ரை யும் ,
உறவுகளையும், நட்பையும்
பிரிந்துவிட்டே உங்களோடு வாழ
வந்திருக்கிறாள் . தன்
அடையாளங்களை இழந்துவிட்டே
அவள் உங்கள் வீட்டுக்குள்
அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
👩🏻உங்களுக்கு நட்புவட்டம் இருப்பதைப் போலவே அவளுக்கும் தோழமை
இருக்கும். பள்ளிப் பருவத்திலிருந்தே நட்பு கொண்டாடும் ஆண்களும்
அதில் இருக்கலாம்; அக்கறை காட்டும் அலுவலக நண்பர்களும்
இருக்கலாம். நீங்கள் தவறாக நினைப்பீர்களே என அத்தனை நட்புகளையும்
ஒதுக்கித் தள்ளிவிட்டு அவள் வாழ்கிறாள். மனசில் இருப்பதை யாரிடமும்
பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு வாழ்க்கை எவ்வளவு துயரங்கள் நிறைந்தது
என்பது உங்களுக்குத் தெரியுமா?
👩🏻இவ்வளவையும் நிறைவாகச் செய்யும் அவள் உங்களிடமிருந்து
எதிர்பார்ப்பது இதைத்தான்... உங்கள் வீட்டில் அவள் அறிந்த
உறவு நீங்கள் ஒருவர்தான். உங்கள் ஆதரவைத்தான் அவள்
கேட்கிறாள். அவளைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறாள்.
ஆறுதலான அன்பை அவள் வேண்டி நிற்கிறாள்.
👩🏻இவ்வளவையும் நிறைவாகச் செய்யும் அவள் உங்களிடமிருந்து
எதிர்பார்ப்பது இதைத்தான்... உங்கள் வீட்டில் அவள் அறிந்த
உறவு நீங்கள் ஒருவர்தான். உங்கள் ஆதரவைத்தான் அவள்
கேட்கிறாள். அவளைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறாள்.
ஆறுதலான அன்பை அவள் வேண்டி நிற்கிறாள்.
தருவீர்களா.?
0 Comments
Thank you