HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்!

♥#தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்!

♥ தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர; அடையாளம் ஆகும். தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது.

♥இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

♥இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது. தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

♥ சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் 'தாலம்" என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.

♥பதினோராம் நு}ற்றாண்டில்தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'தமிழர் திருமணம்" என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

♥ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது :

♥திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நு}ல் இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு. 

♥தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
தொண்டு
தன்னடக்கம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
மேன்மை.

♥இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

Post a Comment

0 Comments