#மௌனம்
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்..
இந்த வார்த்தைக்கு பல
அர்த்தங்கள் உள்ளன.
கேள்வி கேட்கப்படும்
நேரத்தில் *மௌனம்* சம்மதம்.
நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது *மௌனம்* துன்பம்.
இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது *மௌனம்* நம்பிக்கை.
நம் இதயத்தில் அமர்ந்த
அந்தக் காதலில் *மௌனம்* சித்ரவதை.
நாம் தோல்வி கண்டு
வெற்றிக்கு வழிதேடும் போது *மௌனம்* பொறுமை.
நாம் வெற்றி கண்டபோது
நம்மைச் சூழ்ந்திருக்கும் *மௌனம்* அடக்கம்.
திருமணக்கோலத்தில்
உள்ள அமைதியின் போது *மௌனம்* வெட்கம்.
தவறுதலாக தவறு செய்த போது *மௌனம்* பயம்.
ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது *மௌனம்* எதிர்பார்ப்பு.
கோபத்தை குறைக்காமல்
அடக்கும் போது *மௌனம்* ரத்தக்கொதிப்பு.
இலக்கை அடைய நினைத்து
ஒருமுகப்படுத்தும் போது
*மௌனம்* சக்தி.
தீவிரமாகப் போராடும் போது *மௌனம்* வலிமை.
பிடிக்காத விஷயங்களை
ஒத்துக்கொள்ளாத போது
*மௌனம்* எதிர்ப்பு.
கல்யாணவீட்டினில்
கால் இடறி விழுந்தபின் எழுந்து அமர்ந்திருக்கும் போது *மௌனம்* அவமானம்.
நம்மை விட்டு பிரிந்தவர்களை
பாசத்தோடு நினைக்கும் போது *மௌனம்* துக்கம்...!
நம் குடி கெடுத்தவர்களை
பழிவாங்க நினைக்கும் போது *மௌனம்* ஆத்திரம்.
கற்ற வித்தையை கையாளும் போது *மௌனம்* ஆனந்தம்.
அயர்ந்த வேளையில்
அமைதியான அந்த
*மௌனம்* உறக்கம்.
உறக்கம் என்று அனைவரும்
நினைத்திருக்க
உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க *மௌனம்* மரணம்...!
0 Comments
Thank you