♥ஆசை – ஒரு பக்க கதை
♥மீனா, புது வேலைக்காரி பேர் என்ன?
இப்ப அவ பேர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?…கூப்பிட்டு பேசணுமா?
இல்லே…ஒரு வேலைன்னா …அதை விடு…இதை எடுன்னு சொல்லலாம்லே…!
அதை எல்லாம் நான் பார்த்துப்பேன்…நீக கம்முன்னு உங்க வேலையைப் பார்த்தா போதும்…!
♥வாயை மூடிக்கொண்டேன். இருந்தாலும் மனமெல்லாம் அவள் நினைவாகவே இருந்தது.
ஒரு நாள் மனைவி மீனா பாத்ரூமில் இருக்கையில், வேலைக்காரி வரவும், அவளிடம்….
”நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு”…என்றேன்.
சிரித்தபடியே உள்ளே சென்றாள்
♥சற்றைக்கெல்லாம் மனைவி என் எதிரே வந்து நின்றாள்.
அவகிட்டே அவ கட்டியிருக்கிற புடவை அழகா இருக்குன்னு சொன்னீங்களா?
♥இதிலே என்ன தப்பு…அழகான புடவையா இருக்கே…இதுமாதிரி உனக்கு ஒண்ணு எடுக்கலாமேன்னு கேட்டேன்.
ம்…ம்….அப்போ இத்தனை நாளா, நான் அதை கட்டியிருந்ததை பார்க்கலே…அப்படித்தானே?
♥நீ கட்டியிருந்தியா…?
அது என் பழைய புடவை…நான் கொடுத்ததைத்தான் கட்டிக்கிட்டு வந்திருக்கா…உங்ககிடே அப்புறம் பேசிக்கிறேன்’ முறைத்தபடியே சென்றாள்.
செய்வதறியாது வாயடைத்து நின்றேன்…!
- சந்திரஹரி
0 Comments
Thank you