HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவி என்பவள் இறைவன் அளித்துள்ள மகத்தான பொக்கிஷம்

♥ மனைவி என்பவள் இறைவன் அளித்துள்ள மகத்தான பொக்கிஷம்

♥நீங்கள் உங்கள் மனைவியின் மேல் ஒரு மடங்கு அன்பைக் காட்டினீர்கள் என்றால் அவள் உங்களை போல நூறு மடங்கு அன்பைப் பொழிவாள். பெண்மைக்கே உள்ள இந்த தாராள மனப்பான்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

♥மனைவியை நேசிப்பது என்றால், "I LOVE YOU, I LOVE YOU" என்று அவளிடம் போய் ஒப்பிப்பதல்ல. உங்கள் அன்பு, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட வேண்டும். உங்களது பார்வையில் அது பிரதிபலிக்க வேண்டும். மிகக் குறிப்பாக, திருமணமான புதிதிலே, பெண்ணுக்கு இத்தகையதோர் அன்பும், கவனிப்பும், கரிசனமும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன.

♥திருமணமான உடனேயே மனைவியானவள் அனைத்தையும் மறந்துவிட்டு, தனக்கு சேவை செய்யத்துவங்க வேண்டும் என்று, பல கணவன்மார்கள் நினைக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம்.

♥தாய் அல்லது சகோதரிகளின் பேச்சைக்கேட்டுக் கொண்டு, வேண்டாத சட்ட திட்டங்களை மனைவியின் மீது திணிப்பது, அடக்குமுறைகளைக் கையாண்டு ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவை அநாகரிகமானவை மட்டுமல்ல, அவற்றால் பயன் விளையாது. மாறாக பாதகங்கள் மட்டுமே எழும்.

♥உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமுள்ள "அன்யோன்யம்" உங்கள் இருவரால் மட்டுமே முடிவு செய்யப்படுவதாக இருக்கட்டும். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து வெளியேற்றி, நீங்கள் இருவரும் நிறைய மனம் விட்டுப்பேசி, ஒருவர் மற்றவர்பால் உள்ளத்தால் நெருங்கிவரும் சாதகமான சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

♥கல்யாணமான புதிதிலே, தனது பெற்றோர் மீதும், உடன் பிறந்தோர் மீதும், மனைவி எண்ணமிட்டபடி இருப்பதும், பிறந்த வீட்டுக்குச் சென்றுவர அவள் அடிக்கடி விருப்பம் தெரிவிப்பதும் மிகவும் இயற்கை. இதில் தவறேதுமில்லை. சொல்லப்போனால், இயற்கையின் கட்டாயத் தேவையே. ஏனெனில், உயிர் வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் "இரத்தப் பாசத்தை" பெண்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இறைவன் வழங்கியிருக்கின்றான்.

♥பிறந்த வீட்டின்பால் மனைவிக்கு ஏற்படும் நாட்டம் வெகு பல குடும்பங்களில் பெரிதுபடுத்தப்பட்டு, விகாரப் படுத்தப்படுகிறது. இது சரியன்று, முறையன்று. பிறந்த வீட்டுக்குச் சென்றுவர மனைவியை அனுமதிப்பதால் தீமை எழுவதில்லை. மாறாக நன்மை மட்டுமே விளைகின்றன.

♥உங்கள் மனைவி எனும் அந்தஸ்தோடு பிறந்த வீட்டுக்குச் சென்று வரும்போது அவளுக்குள் இரட்டிப்பு பலமும் சந்தோஷமும் எழுகின்றன. அவளுடைய மனதில் உள்ள இறுக்கம் யாவும் தளர்ந்து விலகுகின்றன. அவளுக்குள்ளே மன ஆரோக்கியம் வளரத் தொடங்குகின்றன. அவளுடைய நியாயமான - அடிப்படையான - அதுவும் இயற்கையான உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். அதலால், அவளுடைய உள்ளத்தில் உங்களைப்பற்றிய "நல்லபிப்ராயம்" கிடு கிடுவென உயர்கிறது.

♥உங்களை உயர்வாக மதிக்கத் துவங்குகிறாள். நன்றி பாராட்டத் தலைப்படுகிறாள். நீங்கள் அறியாமலேயே அவள் உங்களை மிகவும் நெருங்கி வந்து விடுகிறாள். (இதை பல ஆண்கள் உணர்வதே இல்லை.)

♥பிறந்த வீட்டுக்குச் சென்று வர அவளை சுதந்திரமாக அனுமதித்தீர்களெனில், இந்த அனுமதி ஏற்படுத்தும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாகக் காண முடியும். ஓரிரு மாதங்களிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துவிடும். பிறந்த வீட்டின்மேல் அவளுக்குள்ள நாட்டம் தன்னாலேயே குறைந்துவிடும். அடிக்கடி செல்ல மாட்டாள். சென்றாலும், "அவர் காத்துக்கொண்டிருப்பார் - எதிர்பார்த்துக்கொண்டிருப்பார் - கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்" என்றே புலம்பிக் கொண்டிருப்பாள்.

♥போனேன் வந்தேன் என்று சுருக்கென்று கிளம்பி வந்து விடுவாள். தனக்கு எல்லாமே தன் கணவன் தான் என்பதை அவள் மனம் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கும். எனவே தடைகளை ஏற்படுத்தி மனைவியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது அறிவீனமே!

♥மனைவிக்கு நீங்கள் அளிக்கும் சிறிதளவேயான சுதந்திரமானது, எல்லையற்ற இல்லற சுதந்திரத்தை - இன்பத்தை உங்களுக்கு வாரி வழங்கப்போகிறது என்பதை நீங்கள் வெகு விரைவில் புரிந்து கொள்வீர்கள்.

Post a Comment

0 Comments