பெண் என்பவள்
மிகவும் வெட்கப்படுபவள்
மானத்தை உயிரென கருதுபவள்
அப்படி இருந்தும்
தன் தாயிடம்
சொல்ல தயங்கும் விஷயத்தையும்
தனக்கு உயிர் கொடுத்த தாயிடமே
தன் அங்கத்தை காட்ட
அசிங்கப்படும் பெண்
துளி கூட
மறைக்காமல்
ஒட்டுமொத்தமாக
பரிசுத்தமாக
ஒப்படைப்பாள்
தன்னையும் சேர்த்து
தன் கணவனிடத்தில்
அவள்
அப்பொழுது மிகவும்
புனிதமாக உணர்வாள்
இதற்கு பெயர்
என்னிடம் கேட்டால்
நான்
காமம் என்று சொல்லமாட்டேன்
ஆழம் என்று சொல்வேன்
அன்பின் ஆழம் என்று சொல்வேன்
கணவன் தான்
ஒரு பெண்ணுக்கு எல்லாம்
அவர் தான் உயிர் உடல் ஆவி எல்லாம்
எதையும் அவரிடத்தில் துளி கூட மறைக்க மாட்டாள்
கட்டின கணவனுக்கு மிகவும் உண்மையாக இருப்பவள் மனைவி
அப்படி என்றால்
கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்
கள்ளக்காதலனின் உதவியுடன் கணவனை கொன்ற மனைவி
என்று ஏன்
செய்தித் தாள்களில்
தினமும் வருகிறது
என்று கேட்கிறீர்கள் ?
முதலில்
அவளை
பெண் என்றே
சொல்லாதீர்கள்
அது பெண் இனத்திற்கே
அசிங்கம்.
காதல் என்றால்
ஒருத்தி
ஒருவன் மீது கொள்வது தான் காதல்
உயிருக்கு ஒரு முகம் தான்
பெண்ணுக்கு
உயிர்
அவன்
கணவன் தான்
எவளோ
செய்யும் தவறுக்காக
எல்லா பெண்களையும்
தவறாக எண்ணி விட முடியாது
அப்படி பார்த்தால்
ஆண்களிலும்
துச்சாதனன்கள்
இருக்கத் தான் செய்கிறார்கள்.
எவனோ செய்த தவறுக்கு
எல்லா ஆண்களையும்
தப்பாக பார்க்க முடியாது
ஆண்மை கொண்ட
ஆண்கள் நிறைய பேர்
இப்புவியில்
வாழ்கிறார்கள்
பெண்மை கொண்ட
பெண்கள்
அதிகம் பேர்
இப்பிரபஞ்சத்தில்
வாழ்கிறார்கள்
என்ன ஒன்று
நஞ்சுகளுக்கு இடையில்
வாழ்வதால்
எல்லாவற்றையும்
சந்தேகத்துடனே
பார்க்க வேண்டி உள்ளது
பெண்மையை மதிப்பது ஆண்மை
ஆண்மைக்கு உண்மையாய் இருப்பது பெண்மை
0 Comments
Thank you